Relationship Tips: காதல் உறவு என்பது திருமணம் வரை நீடிப்பது இந்த காலகட்டத்தில் மிகவும் சிரமமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆண் - பெண் உறவு என்பது இந்த காலகட்டத்தில் முன்பை விட கடுமையான சிக்கலுக்கு உரிய ஒன்றாக மாறியுள்ளது. காரணம், ஆண் - பெண் இருவரின் எதிர்பார்ப்புகளும், ஆசைகளும், விருப்பங்களும் பெரிதாகிவிட்டதால் அதில் ஏமாற்றம் வரும்போதும், அதிருப்தி வரும்போதும் உறவுகளில் பிரச்னை ஏற்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால், காதல் உறவின் மீது பலருக்கும் நம்பிக்கை இல்லாமல் போய்விடுகிறது. இணையர் நமது நம்பிக்கைக்குரியராக இருப்பார், காதல் உறவில் இருந்து திருமண பந்தத்துக்குச் செல்ல விரும்புவாரா என்ற கேள்விகள் ஆண் - பெண் ஆகிய இருவரின் மனங்களில் இருந்துகொண்டுதான் இருக்கும். பலருக்கும் அவர்கள் நினைத்தது போல் நடக்கும், சிலர் ஏமாற்றமடைவதையும் பார்க்க முடிகிறது. 


பெண்களின் புலம்பல்


எனவே, ஒருவரை எப்படி நம்புவது என்பதுதான் இந்த கால காதலர்களின் முதல் கேள்வி. அதுவும் ஆண்களை எப்படி நம்புவது என்றே தெரியவில்லை என பெண்கள் அதிகம் புலம்புவதையும் காண முடிகிறது. அந்த வகையில், பெண்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில் ஒரு புதிய ஆய்வு வெளியாகி உள்ளது. அதாவது, ஆண்களில் தாடி வைத்திருக்கும் ஆண்கள் காதல் உறவில் சிறந்தவர்களாகவும், விசுவாசமாகவும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | உங்கள் Ex உடன் மீண்டும் காதல் உறவை தொடங்கலாமா? குழப்பமா இருந்தா இதை படிங்க..


வெளியான ஆய்வு முடிவுகள்


அந்த ஆய்வின் முடிவில், தாடி அதிகமாக வைத்திருக்கும் ஆண்கள் அவர்களின் காதல் பந்தத்தில், தாடியில்லாமல் இருக்கும் ஆண்களை விட நிலைத்தன்மையுடன் இருப்பார்கள் என தெரிவிக்கிறது. Archives Of Sexual Behaviour என்ற இணைய ஆய்விதழில் வெளியாகியிருக்கும் இந்த ஆய்வில், தாடி வைத்திருக்கும் ஆண்கள் நீண்ட கால காதல் உறவில் அதிக நாட்டம் உடன் இருப்பார்கள் என்றும், தனது காதலி மீது மட்டுமே ஆர்வத்தோடு இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இதனால், அவர்கள் புதிய பெண்களை நோக்கியோ, புதிய உறவை நோக்கியோ அவ்வளவு சீக்கிரம் செல்ல மாட்டார்கள் என கூறப்படுகிறது. 


414 ஆண்களிடம் ஆய்வு


ஆனால், தாடியில்லாமல் இருக்கும் கிளீன் சேவ் ஆண்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது என்றும் காதல் பந்தத்தில் அதிக நிலைத்தன்மையுடன் இருக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. 18 வயதில் இருந்து 40 வயது வரையிலான 414 ஆண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் முகத்தில் தாடி வளர்ப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக தாடியுடன் இருப்பவர்கள் புதிய பார்ட்னரை தேடி செல்வதில் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பார்கள் என தெரிகிறது. குடும்பத்தின் மீதும், அவர்களின் பார்ட்னர் மீது மட்டுமே அவர்கள் ஆர்வம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 


தாடி வைத்த ஆண்கள் vs கிளீன் சேவ் ஆண்கள்


இந்த ஆய்வின் இணை ஆசிரியரான பேராசிரியர் பீட்டர் ஜோனேசன் இது விளக்கி உள்ளார். அதில், அதிக தாடி கொண்ட ஆண்கள் தங்கள் காதல் மற்றும் குடும்ப உறவுகளில் அதிகமாக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். புதிதாக ஒரு உறவுக்குச் செல்வதற்கு அவர்கள் எந்த காரணத்தையும் தேடுவதில்லை. அத்தகைய ஆண்கள் ஒரே ஒரு துணையுடன் மட்டுமே காதலை பேணுவதற்கு தங்களால் முடிந்தவற்றை செய்வார்கள். 


நிச்சயமாக, தாடி வைத்த ஆண்களை உறவில் அதிக ஆர்வமுள்ள பார்ட்னர்கள் என இந்த ஆய்வு கூறுகிறது. ஆனால் இந்த ஆய்வு ஒரு டிரெண்டை மட்டுமே பிரதிபலிக்கிறது. அனைத்து தாடி வைத்த ஆண்களும் உறவில் உண்மையாக தான் இருப்பார்கள் என புரிந்துகொள்ளக் கூடாது. இதனை நன்றாக மனதில் வைத்துக்கொள்ளவும்.


மேலும் படிக்க | கண்டவுடன் காதல் வருவது நல்லதா? கெட்டதா? பதிலை தெரிஞ்சிக்கோங்க..
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ