அனைவருமே மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை தான் விரும்புகின்றனர். ஆனால் சில தவறுகளால் பல்வேறு சண்டைகள் ஏற்பட்டு குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகிறது.
திருமண வாழ்க்கையில் சண்டைகளை தவிர்க்க அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவது, சிகரெட், மதுபானம் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கணவன் - மனைவி இருவரும் தினசரி 30 நிமிடங்களாவது உட்கார்ந்து பேச வேண்டும். தினசரி முறையான தகவல் தொடர்பு இருந்தாலே வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.
திருமண உறவில் பணம் முக்கிய ஒன்றாக உள்ளது. கணவன் முறையான வருமானம் பெறவில்லை என்றால் சண்டைகள் ஆரம்பமாகும். பல்வேறு விவாகரத்துகளுக்கு முதன்மையான காரணம் பணமாக உள்ளது.
உங்களது குடும்பத்தினரை தவிர வெளியாட்களை வீட்டில் சேர்ப்பது குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாக காரணமாக அமையும். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கு இடையில் மூன்றாவது நபர் வர அனுமதிக்க வேண்டாம்.
உங்கள் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் தவிர மற்றவர்களிடம் நெருக்கமாக பழகுவது கணவன் - மனைவி இடையே பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
அவ்வப்போது வரும் சண்டைகளை உடனடியாக பேசி தீர்க்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் சிறிய சண்டைகள் கூட பின்னாளில் பெரிய சண்டையாக மாறலாம்.