உங்கள் Ex உடன் மீண்டும் காதல் உறவை தொடங்கலாமா? குழப்பமா இருந்தா இதை படிங்க..

Is It Ok To Go Back To My Ex : பலருக்கு, தங்களின் முன்னாள் காதலருடன் மீண்டும் உறவை புதுப்பித்துக்கொள்ளலாம் என்று தோன்றும். அப்படி செய்வது சரியான யோசனையாக இருக்குமா? இங்கு அது குறித்து பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Jul 26, 2024, 06:18 PM IST
  • முன்னாள் காதலுடன் கை சேரலாமா?
  • குழப்பமாக இருந்தால் என்ன செய்வது?
  • ரிலேஷன்ஷிப் டிப்ஸ், இதோ!
உங்கள் Ex உடன் மீண்டும் காதல் உறவை தொடங்கலாமா? குழப்பமா இருந்தா இதை படிங்க.. title=

Is It Ok To Go Back To My Ex : “காதல் என் காதல்..அது கண்ணீருல..” என காதல் தோல்விக்கு பிறகு இப்படி பாடல் பாடிக்கொண்டு சாேகத்துடன் திரிபவர்கள் பலரை பார்த்திருப்போம். இவ்வளவு ஏன்? நாமே ஒரு கட்டத்தில் காதல் தோல்வியை சந்தித்திருப்போம். அப்போதெல்லாம், ஒரு முறையாவது “நமது முன்னாள் காதலரிடம் மீண்டும் சென்று விடலாமா?” என்று நமக்கு தோன்றியிருக்கும். 

நம் முன்னாள் காதலர்களைத்தான் ஸ்டைலாக “Ex” என்று கூற ஆரம்பித்து விட்டோம். இப்படி, முன்னாள் காதலர்களிடம் மீண்டும் சென்று விடலாம் என தாேன்றுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அந்த முன்னாள் காதலர் நம்முடன் எப்போதும் தொடர்பில் இருப்பது, நமக்கு வேறு யாரும் கிடைக்கப்போவதில்லை என்ற எண்ணம், முன்னாள் காதலர் அவ்வப்போது நம் வாழ்வில் வந்து போவது போன்றவை அதில் முக்கியமானதாக இருக்கலாம். இதையெல்லாம் விடுத்து, அவரை பற்றி யோசிக்கவே இல்லை என்றாலும் கூட, அவரிடம் மீண்டும் சென்று விடலாமா என்ற எண்ணம் தோன்றும். இதில், என்ன முடிவு எடுத்தால் சரியாக இருக்கும்? அப்படி மீண்டும் அவரிடம் நீங்கள் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டால், அதற்கு முன்னர் சில கேள்விகளை உங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ள வேண்டும். அவை என்னென்ன தெரியுமா? 

காதல் முறிவிற்கான காரணம் என்ன?

உங்களுக்கு காதல் முறிவு ஏற்பட்டதற்கான காரணம், உங்கள் இருவரை வைத்து அல்லாமல், உங்களை சுற்றி இருக்கும் சூழலால் என்றால், அந்த காதல் உறவை மீண்டும் கனெக்ட் செய்வது குறித்து யோசிக்கலாம். உதாரணத்திற்கு, உங்களில் யாரேனும் ஒருவர் வெளி ஊருக்கு, அல்லது வெளி நாட்டிற்கு செல்ல வேண்டி இருந்ததால் ஏற்பட்ட காதல் முறிவாக இருக்கலாம், அல்லது உங்கள் இருவர் வீட்டில் எழுந்த எதிர்ப்பு காரணமாக இருவரும் காதலை முறித்துக்கொண்டதாக இருக்கலாம். ஆங்கிலத்தில் Right person wrong time என்ற சொல்லாடல் இருக்கிறது. அது போல, சரியான நபரை நீங்கள் தவறான நேரத்தில் பார்த்து, பின்பு அவருடன் காதலை முறித்துக்கொண்டிருந்தால், கண்டிப்பாக அந்த உறவை மீண்டும் இணைக்க ஒரு வாய்ப்பு தரலாம். 

காதல் முறிவு ஏற்பட்ட வயது:

காதல் வருவதற்கு வயது ஒரு தடையல்ல. உதாரணத்திற்கு பள்ளி பருவத்தில், அல்லது இளம் வயதில் ஒருவரை காதலித்து பின்னர் அவருடன் ஏற்பட்ட சண்டையால் அல்லது வேறு காரணத்தால் நீங்கள் பிரிந்திருக்கலாம். பலருக்கு இளம் வயதில் தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதே தெரியாது. எனவே, நீங்கள் ஓரளவு வளர்ந்த பின்பு அந்த நபரை மீண்டும் சந்திக்க நேர்ந்திருந்தால், அவர் உண்மையிலேயே இப்போது மாறிய நபராக இருந்தால் அந்த உறவை மீண்டும் இணைப்பதை குறித்து யோசிக்கலாம். 

இருவரும் மனம் உவந்து வந்தால்:

காதல் முறிவு ஏற்பட்டது, இருவரின் தவறாகவும் இருந்தால், இருவரும் அந்த தவறை சரி செய்து உறவை புதுப்பிக்க வேண்டும் என நினைத்தால், கண்டிப்பாக மீண்டும் ஒன்றினைவது குறித்து யோசிக்கலாம். 

மேலும் படிக்க | Love Symptoms: இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் காதலில் விழுந்து விட்டீர்கள் என்று அர்த்தம்!

யாரெல்லாம் எக்ஸ் இடம் திரும்ப செல்ல கூடாது?

>காதலித்த நபரால் ஏமாற்ற பட்டவர்கள் கண்டிப்பாக திரும்ப செல்ல கூடாது. உதாரணத்திற்கு, நீங்கள் காதலித்த நபர் உங்களுடன் இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பது அல்லது அவரிடமும் கடலை போட்டுக்கொண்டிருந்து, அது உங்களுக்கு தெரிய வந்த பின்னர் காதல் முறிவு ஏற்பட்டிருந்தால் மீண்டும் அந்த நபரிடம் செல்லாதீர்கள். 

>உங்களால், அந்த நபருடன் ஒரு வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியவில்லை என்றால் அவரிடம் மீண்டும் செல்ல வேண்டாம். 

>யாரும் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால், உங்கள் முன்னாள் காதலரிடம் செல்ல கூடாது. அது அவருக்கும் நல்லதல்ல, உங்களுக்கும் நல்லதல்ல. 

>அந்த நபர் உங்களை முன்னரே உணர்வு ரீதியாக அல்லது உடல் ரீதியாக துன்புருத்தியவராக இருந்தால் அவர் இருக்கும் திசை பக்கம் கூட திரும்பி விடாதீர்கள். 

மேலும் படிக்க | சிறந்த காதல் ஜோடிகளாக இருக்க வேண்டுமா? இந்த விஷயங்களை பாலோ பண்ணுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News