31 காய்கள், இரண்டு ஆட்டக்காரர்கள், கருப்பு மற்றும் வெள்ளை வழி சதுரங்கள் வழியே நகர்ந்து ராஜாவை வீழ்த்துபவர் வெற்றியாளர். சதுரங்க விளையாட்டை பற்றி தெரியாதவர்களுக்கு இப்படி சிம்பிளாக இதை விளக்க முடியும். ஆனால், இந்த அளவிற்கு எளிமையான விளையாட்டு இல்லை, சதுரங்கம். இதை விளையாட விரைவான யோசனை, சட்டென முடிவெடுக்கும் திறன், ஆக்கச்சிந்தனை, கூர்மையான நினைவு திறன் உள்ளிட்டவை தேவை. இந்த விளையாட்டில் இருக்கும் இன்னொரு ப்ளஸ் பாய்ண்ட் என்னவென்றால் இதை அனைவருமே கற்றுக்கொள்ளலாம். ஆனால், அனைவராலும் கற்றுக்கொண்டது போலே எளிதாக விளையாடி விட முடியாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செஸ் விளையாடினால் புத்திசாலி ஆகலாமா? 


புத்திசாலித்தனம் என்பது கூடவே பிறக்கும் விஷயம் அல்ல. நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள், நாம் வாழும் சூழலே நாம் எப்படிப்பட்ட மனிதர் என்பதை தீர்மானிக்கும். புத்திசாலியாக இருப்பவர்களால் மட்டுமே செஸ் விளையாட முடியும் என்ற தவறான கருத்து பலர் மத்தியில் நிலவி வருகிறது. செஸ் விளையாடினால், நமது நுண்ணறிவு திறன் எனப்படும் IQ (Intelligence Quotient) அதிகமாகிறது. இதனால், நினைவாற்றல் அதிகரித்து, நம்மை பல விஷயங்களை நினைவில் வைக்க வழிவகை செய்கிறது. அது மட்டுமன்றி, செஸ் விளையாடினால் நாம் யோசிக்கும் திறனும் மாறுபடும். இது மட்டுமா? சதுரங்க விளையாட்டினை விளையாடுவதால் நமது மூளைக்கு ஏற்படும் நன்மைகளை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம். 


1.நினைவாற்றல் திறன் மேம்படும்..


நன்றாக சதுரங்கம் விளையாட தெரிந்தவர்களுக்கு  வலுவான நினைவாற்றல் திறன் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, விளையாட்டு நகர்வுகளின் பல சேர்க்கைகள் மற்றும் அவற்றின் சாத்தியமான விளைவுகளை தெரிந்து வைத்துக்கொண்டால்தான் நன்றாக செஸ் விளையாட முடியும். செஸ் விளையாடுபவர்கள், தாங்கள் எங்கோ, எப்போதோ கேட்ட விஷயங்களை கூட நினைவில் வைத்துக்கொண்டிருப்பர். அதை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக்கொள்வர்.  இது அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குள் ஏற்படும் மாற்றமாகும். 


2. படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும்..


இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு செஸ் விளையாடும் மாணவர்களை வைத்தும் செஸ் விளையாடாத மாணவர்களை வைத்தும் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், செஸ் விளையாடாத மாணவர்களை விட செஸ் விளையாடுபவர்களுக்கு படைப்பாற்றல் திறன் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சவாலான டாஸ்குகளை செஸ் விளையாடுபவர்களே சாதூர்யமாக கையாண்டுள்ளனர். இதனால், செஸ் விளையாட்டு நமது படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 


மேலும் படிக்க | தினமும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? உண்மை என்ன?


3.டிமன்ஷியா நோய் பாதிப்பில் இருந்து தடுக்கிறது..


டிமன்ஷியா என்பது மறதி நோய் ஆகும். 2019ஆம் ஆண்டில் அமெர்க்க பல்கலைக்கழகம் ஒரு மருத்துவ ஆராய்ச்சியை நடத்தியது. அதில், செஸ் விளையாடுபவர்களிடம் இருக்கும் நினைவாற்றல் அவர்களை டிமன்ஷியா பாதிப்பில் இருந்து காப்பாற்றுகிறது என்பது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம், செஸ் விளையாட்டில் நினைவாற்றல், கணக்கு போடும் திறன், காட்சி-இடஞ்சார்ந்த திறன்கள், க்ரிடிக்கல் திங்கிக்ங் போன்ற திறன்கள் இருக்கும். இதனால், செஸ் விளையாடும் வயதானவர்கள் மறதி நோய் வராமல் தப்பிக்கலாம். 


4.இரண்டு பக்க மூளையும வேலை செய்யும்..


செஸ் விளையாடும் போது நமது இரண்டு பக்க மூளையும் வேலை செய்யும் என ஜெர்மன் நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. செஸ்ஸில் இரண்டு பக்கமாக விளையாட வேண்டும். எதிராளியை தோற்கடிக்க வேண்டும் என யோசிக்கும் அதே நேரத்தில், நம் ராஜாவை எப்படி காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற யோசனையும் நமக்கு இருக்க வேண்டும். அப்போது நமது இரண்டு பக்க மூளையும் செயல்படுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ