FIDE செஸ் சாம்பியன் ஆவாரா பிரக்ஞானந்தா? ஆவலுடன் காத்திருக்கும் தமிழர்கள்

FIDE World Cup 2023: பிரக்னாநந்தா டை-பிரேக்கில் உலகின் நம்பர் 3-வது இடத்தில் இருக்கும் கருவானாவைத் தோற்கடித்து, இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்கிறார் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 21, 2023, 10:30 PM IST
  • பிரக்ஞானந்தாவுக்கு குவியும் பாராட்டுகள்
  • விஸ்வநாதன் ஆனந்த்தின் பாராட்டில் நனையும் பிரக்ஞானந்தா
  • FIDE செஸ் சாம்பியன் ஆவாரா பிரக்ஞானந்தா?
FIDE செஸ் சாம்பியன் ஆவாரா பிரக்ஞானந்தா? ஆவலுடன் காத்திருக்கும் தமிழர்கள் title=

பாகு, ஆகஸ்ட் 21: நடப்பு ஃபிடே உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்திய செஸ் ஜாம்பவான் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். 18 வயதான பிரக்னந்தா - தற்போதைய போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.அரையிறுதியில் டைபிரேக்கில் 3.5-2.5 என்ற கணக்கில் உலகின் 3ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்தார்.

உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. அரை இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார். 

"இந்தப் போட்டியில் மேக்னஸ் உடன் விளையாடுவேன் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் நான் இறுதிப் போட்டிக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை... என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பேன்” என்று பிரக்ஞானந்தா அடக்கத்துடன் தெரிவித்தார்.

இந்திய கிராண்ட் மாஸ்டர் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) அமெரிக்க GM-க்கு எதிரான FIDE உலகக் கோப்பை அரையிறுதியின் இரண்டாவது ஆட்டத்தை டிரா செய்தார். கருவானாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட கிளாசிக்கல் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த சென்னை வீரர், போட்டியை டை பிரேக்கில் முடித்தார்.

சனிக்கிழமையன்று நடந்த முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற கார்ல்சென், அஜர்பைஜான் வீரர் நிஜாத் அபாசோவுக்கு எதிராக 74 நகர்த்தல்களில் டிரா செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மேக்னஸ் கார்ல்சன் ஏற்கனவே FIDE உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் உள்ளார். நிஜாத் அபாசோவை தோற்கடித்து இறுதிப் போட்டியில் தனது இடத்தைப் பதிவு செய்துவிட்டார் மேக்னஸ் கார்ல்சன்.

மேலும் படிக்க | ஆசிய கோப்பை 2023: இந்திய அணி அறிவிக்கப்பட்டது! எதிர்பார்ப்பு பொய்யானதா?

நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். அரை இறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்துக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது.

டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ள வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டபோது, கருணாவை 3.5-2.5 புள்ளிகளில் வீழ்த்தினார். இதன் மூலம் பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா , இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதுவார். 

செஸ் வீரர்களில் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஐந்து முறை உலக சாம்பியனான ஆனந்த், X இல் தனது கணக்கில் பிரக்ஞானந்தாவை பாராட்டி எழுதினார். அடுத்த கேண்டிடேட்ஸ் போட்டியில் பிரக்ஞானந்தாவும் இடம்பெறுவார். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்கள் 2024 இல் டிங் லிரனுக்குச் சவாலாக இருப்பவரைத் தீர்மானிக்கும் கேண்டிடேட்ஸ் நிகழ்வுக்குத் தகுதி பெறுகின்றனர்.

மேலும் படிக்க | IND vs IRE: வெற்றியை தொடர இந்த வீரரை வெளியே அனுப்ப திட்டமிடும் இந்திய அணி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News