Top Records Of R Praggnanandhaa: பாகுவில் நடந்த FIDE செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் வெற்றி பெறத் தவறினாலும், ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா வரலாறு படைத்தார். உலக சதுரங்கப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு செல்லும் பயணத்தில் அவர் படைத்த சாதனைகள் பல.
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பிரக்ஞானந்தாவின் சாதனைகள் பல என்றாலும், அவற்றில் ஒருசில...
நடுத்தர வர்க்கத்தில் ரமேஷ்பாபு மற்றும் நாகலட்சுமி தம்பதிகளுக்கு மகனாய் பிறந்து, இன்று உலக அளவில் பேசப்படும் சதுரங்க ஜாம்பவானாக உயர்ந்து வருகிறார் 18 வயது பிரக்ஞானந்தா. சென்னையில் 2005 ஆகஸ்ட்10ம் தேதி பிறந்த இவரின் சகோதரி ஆர். வைசாலியும் செஸ் போட்டிகளில் வல்லவர். ஆர். வைசாலி கிராண்ட் மாஸ்டர் ஆவார்.
ஆர் பிரக்ஞானந்தா 2 வயதில் செஸ் விளையாடத் தொடங்கினார், அவரைப் பற்றி நீங்கள் அறிந்திராத சிறந்த சாதனைகள்
அல்-ஐனில் (யுஏஇ) நடந்த யூத் செஸ் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் கோப்பையை வென்றபோது ஆர் பிரக்ஞானந்தா முதன்முதலில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். 2013ம் ஆண்டில் அவர் உலகின் பார்வையில் படும்போது அவருக்கு வெறும் 8 வயதுதான்.
ஆர் பிரக்ஞானந்தா 2016 ஆம் ஆண்டில் சர்வதேச மாஸ்டர் ஆனார். அப்போது அவருக்கு வயது 10 வயது 19 நாட்கள்தான்.
நார்வே உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக ஆர் பிரக்ஞானந்தாவின் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அது கடந்த ஆண்டு, அதாவது 2022ல். உலக நம்பர் 1 இடத்தை வென்ற மூன்றாவது இந்தியர் ஆனார் பிரக்ஞானந்தா
உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த இளம் வீரர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்தை தனது வழிகாட்டியாக நினைக்கிறார் பிரக்ஞானந்தா
செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு வந்த விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு, இந்தியர்களில் பிரக்ஞானந்தா மட்டுமே அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்
FIDE உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா தோற்றிருக்கலாம். ஆனால் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.
FIDE உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர் பிரக்ஞானந்தா என்ற சாதனையை படைத்துள்ளார்
2016க்குப் பிறகு கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியரும் பிரக்னாநந்தா ஆவார்.
விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா இருவரும் சதுரங்க போட்டிகளில், சர்வதேச ஆளுமைகளாக மாறிய தமிழர்கள் என்பது தமிழகத்தை சேர்ந்த அனைவருக்கும் பெருமை