வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் கிடைப்பதற்கு நாம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். சிலர் மிகவும் நேர்மையானவர்களாகவும், நட்பாகவும், அன்புடன் பழகுபவர்களாகவும் இருக்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரத்தின் படி 5 ராசிக்காரர்கள் நட்பைப் பேணுவதில் வல்லவர்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் மிகவும் நல்ல நண்பர்களாக இருப்பதோடு, நட்புக்காக எதை வெண்டுமானாலும் செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களை வாழ்க்கையில் நண்பர்களாக வைத்திருப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். 


மகரம்
மகர ராசிக்காரர்களின் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் இவர்கள் யாருடன் நண்பர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இவர்களுடன் நட்பு கொள்வது மிகவும் நல்லதாக இருக்கும். இவர்கள் ஒருவரை தங்கள் நண்பராக கருதிவிட்டால், அவரை எப்போதும் விலகுவதில்லை. அவர்களின் துன்ப வேளைகளிலும் உடன் இருக்கிறார்கள். மகர ராசிக்காரர்கள் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்களுடன் நன்றாகப் பழகுவார்கள்.


கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பார்கள். அவர்கள் நட்பில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். இவர்களது நண்பர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். அனைத்து நன்பர்களுக்கும் கடக ராசிக்காரர்கள் நேரம் ஒதுக்குவார்கள். இவர்களுடைய நல்ல குணம் காரணமாக, இவர்களது நண்பர்களும் இவர்களை விட்டு விலகாமல் இருப்பார்கள். கடக ராசிக்கார்ரகள் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறார்களோ, அதே அளவு யதார்த்தமாகவும் இருப்பார்கள். இதன் காரணமாக, இவர்களால் அனைத்து சூழ்நிலைகளையும் நன்றாக கையாள முடியும். 


மேலும் படிக்க | பேசிப்பேசியே மற்றவர்களை சுண்டி இழுக்கும் ராசிகள் இவைதான் 


சிம்மம் 
சிம்ம ராசிக்காரர்கள் நண்பர்களுக்காக உயிரையும் கொடுக்கும் அளவு நட்பை பேணுபவர்கள். இவர்களுடைய நண்பர் பட்டியல் மிக நீளமாக இருக்கும். இவர்கள் நண்பர்களுக்காக அதிகம் செலவழிப்பார்கள். எந்த வகையிலும் இவர்கள் நண்பர்களுக்கு உதவுவதில் பின்வாங்க மாட்டார்கள். ஒரு நண்பர் சிக்கலில் இருந்தால், அவரை வெளியேற்ற எந்த எல்லைக்கும் இவர்கள் செல்வார்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு மேஷம், கடகம், மிதுனம், விருச்சிகம், தனுசு, கன்னி, மீனம் ஆகிய ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.


மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மிகவும் நம்பகமான நண்பர்கள். உங்கள் அனைத்து ரகசியங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் தங்கள் நண்பர்களை நன்றாக கவனித்துக்கொள்வதோடு, பிரச்சனைகளிலிருந்தும் காப்பாற்றுகிறார்கள். நண்பர்களுக்கு சிரமம் ஏற்பட்டால், அண்ட பிரச்சனை முழுவதுமாக தீரும் வரை அவர்கள் அமைதியாக உட்காருவதில்லை. இது தவிர, இவர்களுடன் செலவழிக்கும் நேரமும் நன்றாக கழியும். இவர்களுக்கு கன்னி, சிம்மம், துலாம், விருச்சிகம், மிதுனம் ஆகிய ராசிகளுடன் நல்ல நட்பு இருக்கும். இதுதவிர ரிஷப ராசிக்காரர்களுடனும் மிதுன ராசிக்காரர்கள் நன்றாகப் பழகுவார்கள்.


ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் மிக நல்ல நண்பர்கள். இவர்கள் எப்போதும் தங்கள் நண்பர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இவர்கள் நட்பைப் பேணுவதற்கு எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள். மேலும் இவர்கள் தங்கள் நண்பர்களை தவறான செயல்களிலிருந்து காப்பாற்றுகிறார்கள். இவர்கள் மிதுனம், கன்னி, மகர ராசிக்காரர்களுடன் நன்றாகப் பழகுவார்கள். இது தவிர மேஷம் மற்றும் ரிஷபம் ராசிக்காரர்களுக்கும் நல்ல நட்பு இருக்கும். 


மேலும் படிக்க | சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜூன் 8 வரை ஹை அலர்ட் காலம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR