கேதுவின் கருணையால் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

Ketu Gochar 2023 Date: மெதுவாக நகரும் கிரகங்களில் ஒன்றான கேது அடுத்த ஆண்டு ராசியை மாற்றவுள்ளார். அதுவரை துலாம் ராசியில் இருப்பதன் மூலம் 4 ராசிக்காரர்களுக்கு பணமும், உயர் பதவியும், மரியாதையும் தருவார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 27, 2022, 12:37 PM IST
  • கேது சிலருக்கு சுப பலனைகளை தருவார்.
  • 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதம்.
  • ராகு- கேது பெயர்ச்சி நிகழ்ந்தது.
கேதுவின் கருணையால் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் title=

ஆன்மீகத்தின் சிறந்த கிரகமான கேது 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பங்குனி 29ம் தேதி (ஏப்ரல் 12) பிற்பகல் 1.48 மணியளவில் ராகு- கேது பெயர்ச்சி நிகழ்ந்தது. இப்போது அடுத்த ஆண்டு அக்டோபர் 30, 2023 வரை, கேது இதே ராசியில் இருப்பார்கள்.

ஜோதிடத்தில் முக்கிய கிரக பெயர்ச்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது ராகு - கேது எனும் நிழல் கிரகங்களின் பெயர்ச்சி. இந்த கிரகங்கள் மட்டும் மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் எதிர் திசையில் அதாவது கடிகார சுற்றுக்கு எதிர் திசையில் சுற்றக்கூடிய கிரகங்கள். 

மேலும் படிக்க | திருமண தடைகள் நீங்கி, விரைவில் நாதஸ்வரம் ஒலிக்க சில எளிய பரிகாரங்கள் 

நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர் என்று ஜோதிடம் கூறுகிறது. இதில் இருந்து ராகு மற்றும் கேதுவுக்கு உள்ள முக்கியத்துவம் எளிதில் விளங்கும். அதன்படி எப்போதும் வக்ர நிலையில் இருப்பவர் கேது சிலருக்கு சுப பலனைகளை தருவார். அந்தவகையில் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் வரை எந்த 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இவர்களுக்கு கேது அனுகூலமாக இருப்பார்

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். தங்களின் தடைபட்ட பணிகள் முடிவடையும். ஒரு பெரிய மாற்றம் நிகழலாம். புதிய முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம். 

சிம்மம்: துலாம் ராசியில் கேதுவின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். தைரியம், பலம் அதிகரிக்கும். பெரிய பொறுப்பைப் பெறலாம். இந்த நேரம் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் என்று சொல்லலாம். பணம் சாதகமாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

துலாம்: இந்த கேது பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கும் நன்மை பயக்கும். இவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பணம் சாதகமாக இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வரும். திருமணம் கைக்கூடலாம். 

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு கேதுவின் பெயர்ச்சி காலம் நல்ல பலன்களைத் தரும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு - அந்தஸ்த்து கிடைக்கலாம். வியாபாரிகளும் லாபம் அடைவார்கள். அதிக தைரியத்துடன், முடிவுகளை எடுப்பது எளிதாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஆயுளை நிர்ணயிக்கும் சனீஸ்வரர்: எந்த பாவகத்தில் சனி இருந்தால் தீர்க்காயுசு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News