ராசி ஜோதிடம்: ஒவ்வொரு நபரின் இயல்பும் குணங்களும் வேறுபட்டவையாக இருக்கும். சிலர் எதிரில் இருக்கும் நபரை தங்கள் குணங்களால் கவர்ந்திழுக்கிறார்கள். சிலரோ அவர்களின் தோற்றத்தால் அனைவரையும் ஈர்த்துவிடுகிறார்கள்.
எதிரில் இருப்பவரை பேச்சால் மயக்குபவர்களும் உண்டு. சிலர் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல தோன்றும். இவர்கள் தங்கள் பேச்சால் அனைவரையும் தங்கள் ரசிகர்களாக்கி விடுகிறார்கள். இந்த இயல்பு அந்த நபரின் ராசியை அடிப்படையாகக் கொண்டது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, தங்கள் பேச்சால் அனைவரையும் தங்கள் பக்கம் இழுக்கும் குணம் சில ராசிக்காரர்களுக்கு உள்ளது. அதே சமயம் அவர்களுடைய நகைச்சுவை உணர்வும் வியக்க வைக்கும் வகையில் இருக்கும். பேசிப்பேசியே மற்றவர்களை சுண்டி இழுக்கும் அப்படிப்பட்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த ராசிக்காரர்கள் உரையாடலில் வல்லவர்கள்
மேஷம்:
ஜோதிடத்தின் படி, மேஷ ராசிக்காரர்கள் பேசுவதில் மிகவும் வல்லவர்கள், வித்தியாசமானவர்கள். அவர்கள் பேசும் விதம் மிகவும் கவர்ச்சியாக இருக்கும். இவர்கள் தங்கள் வார்த்தைகளால் அனைவரையும் மயக்குகிறார்கள். நகைச்சுவை உணர்விலும் இவர்கள் வல்லவர்கள். இவர்களும் மகிழ்ச்சியாக இருந்து, மற்றவர்களையும் மகிழ்ச்சியாக பார்க்க விரும்புவார்கள். இவர்களின் இந்த ஸ்டைல் அனைவருக்கும் பிடிக்கும்.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி; 3 ராசிக்கு லாபம், 3 ராசிக்கு நஷ்டம்
விருச்சிகம்:
இந்த ராசிக்காரர்களின் இயல்பும் சற்று வித்தியாசமாகவும் நல்லதாகவும் கருதப்படுகிறது. இவர்களும் தங்கள் பேச்சால் அனைத்தையும் சாதித்து விடுகிறார்கள். இவர்களது நகைச்சுவை உணர்வும் அற்புதமாக இருக்கும். விருச்சிக ராசிக்காரர்களுடன் ஏதாவது ஒரு விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டாலும் வெற்றி பெற முடியாது. இவர்களது புத்தி மிகவும் கூர்மையானது. மற்றவர் நினைப்பதை சாமர்த்தியமாக பேசி புரிந்துகொள்வதில் இவர்கள் வல்லவர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் புத்திசாலிகள் மற்றும் தந்திரமானவர்கள். இருப்பினும், இவர்கள் நல்ல நகைச்சுவை உணர்வைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் பேசும் விதத்தில் அனைவரும் இவர்கள் பக்கம் ஈர்க்கபடுகிறார்கள். எந்த வேலையிலும் வெற்றி பெறக்கூடிய வகையில் அவர்களின் பேச்சு முறை வித்தியாசமானதாக இருக்கும். சமூகத்தில் வித்தியாசமான அடையாளத்தை இவர்கள் உருவாக்குகிறார்கள்.
தனுசு:
இவர்களும் அறிவாளிகளாகவும், புத்திசாலிகளாகவும் கருதப்படுகிறார்கள். இவர்களது பேச்சுத் திறனாலும், பழகும் விதத்தாலும் சமூகத்தில் மகத்தான நிலையை அடைகிறார்கள். இவர்கள் பேசும் விதம் எதிரில் இருப்பவர்களை எளிதாக ஈர்த்துவிடுகிறது. பேச்சு தொடர்பான தொழில் இவர்களுக்கு சர்வநிச்சயமாக வெற்றியை கொடுக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்கள் இன்று தங்களில் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR