இந்த Post Office திட்டத்தில் வங்கிகளை விட அதிக வட்டி கிடைக்கும், பணத்துக்கும் பாதுகாப்பு!!
கடினமாக சம்பாதித்த பணத்தை ஒரு பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு தபால் அலுவலகத்தின் பல திட்டங்கள் ஏற்றதாக இருக்கும். அவற்றில் ஒரு அசத்தலான திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Post Office FD Scheme: கடினமாக சம்பாதித்த பணத்தை ஒரு பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு தபால் அலுவலகத்தின் பல திட்டங்கள் ஏற்றதாக இருக்கும். அவற்றில் ஒரு அசத்தலான திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த திட்டத்தில் வங்கிகளை விட அதிக நன்மைகளை கிடைக்கும், தொகையும் பாதுகாப்பாக இருக்கும்.
தபால் அலுவலக ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டம்
பாதுகாப்பான முறையில் பணத்தை முதலீடு செய்ய, நீங்கள் தபால் அலுவலக (Post Office) நிலையான வைப்புகளில் முதலீடு செய்யலாம். இதில், வட்டி உட்பட பல வசதிகளையும் பெறுவீர்கள். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு லாபத்துடன் அரசு உத்தரவாதமும் கிடைக்கும். காலாண்டு அடிப்படையில் வட்டி செலுத்த வசதி உள்ளது.
எளிய முறையில் FD போட முடியும்
தபால் அலுவலகத்தில் உங்கள் பெயரில் FD போடுவது மிகவும் எளிதாகும். நீங்கள் FD இல் முதலீடு செய்ய விரும்பினால், தபால் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அதைப் பற்றிய முழுமையான தகவலைப் பெறலாம். தபால் நிலையத்தில் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு நிலையான வைப்புத்தொகையை போடலாம்.
ALSO READ: தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு உள்ளதா இதோ உங்களுக்காக பல்வேறு வசதிகள்.!
இந்த நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள்
இதில் உங்கள் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். இதில், நீங்கள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் எஃப்.டி. போடலாம். மேலும், இதில் ஒருவர் ஒரு FD-க்கு மேலான FD-களையும் போடலாம். FD கணக்குகளை இதில் இணைக்கவும் முடியும். 5 வருடங்களுக்கு FD போட்டால் ITR- இல் வரி விலக்கு கிடைக்கும். இது தவிர, நீங்கள் ஒரு திட்டத்தை மற்றொரு திட்டத்தில் எளிதாக மாற்றலாம்.
தபால் அலுவலகத்தில் FD கணக்கை ஓப்பன் செய்வது எப்படி?
தபால் அலுவலகத்தில் எஃப்.டி கணக்கை ஓப்பன் செய்வது மிகவும் எளிது. காசோலை அல்லது பணத்தை செலுத்தி எஃப்.டி கணக்கை ஓப்பன் செய்யலாம். குறைந்தபட்சம் 1000 ரூபாயை முதலீடு செய்து நீங்கள் கணக்கைத் திறக்க முடியும். அதிகபட்ச தொகைக்கு இதில் வரம்பு இல்லை.
உங்களுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?
நீங்கள் 7 நாட்கள் முதல் ஒரு வருடம் வரையிலான கால அளவுக்கு எஃப்.டி போட்டால், உங்களுக்கு 5.50 சதவீதம் வட்டி (Interest) கிடைக்கும். 1 வருடம் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி-க்கும் அதே வட்டி கிடைக்கும். இது தவிர, 3 வருடங்கள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி -க்களுக்கு 6.70 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.
ALSO READ: Post office Extends service: இனி தபால்நிலையத்திலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR