ஃபிக்சட் டெபாசிட் (FD): புதிய வட்டி விகிதத்தை அறிவித்த வங்கி!

பஞ்சாப் நேஷனல் வங்கி தனது ஃபிக்சட் டெபாசிட் (FD) திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை புதுப்பித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 14, 2021, 06:29 AM IST
ஃபிக்சட் டெபாசிட் (FD): புதிய வட்டி விகிதத்தை அறிவித்த வங்கி!   title=

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க், தனது நிலையான வைப்பு நிதி திட்டத்துக்கான புதிய வட்டி விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான் வட்டி விகிதம் 3 சதவீதம் முதல் 5.25 சதவீதம் வரையிலும், 7 நாள் முதல் 45 நாள் வரையிலான நிலையான வைப்பு நிதிக்கு 4.5 சதவீத வட்டியும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள பஞ்சாப் நேஷனல் பேங்க்கின (Punjab National Bank) இந்த புதிய வட்டி (Interest Rate) விகிதமானது மே 1, 2021 முதல் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் வங்கியில் 2 கோடி ரூபாய்க்குள்ளான வைப்பு நிதிக்கு (Fixed Deposits), பொதுமக்களுக்கான வட்டி விகிதம்

ALSO READ | Online Banking Fraud: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் SBI-PNB-ICICI BANK!

புதுப்பிக்கப்பட்ட வட்டி விகிதத்தின் விவரம்
7 நாள் முதல் 14 நாள் வரை - 3%
15 நாள் முதல் 29 நாள் வரை - 3%
30 நாள் முதல் 45 நாள் வரை - 3%
46 நாள் முதல் 90 நாள் வரை - 3.25%
91 நாள் முதல் 179 நாள் வரை - 4%
180 நாள் முதல் 270 நாள் வரை - 4.4%
271 நாள் முதல் 1 வருடம் வரை - 4.5%
1 வருடம் - 5.10%
1 வருடம் முதல் 2 வருடம் வரை - 5.10%
2 வருடம் முதல் 3 வருடம் வரை - 5.10%
3 வருடம் முதல் 
5 வருடம் முதல் 10 வருடம் வரை- 5.25%

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தின் விவரம்
7 நாள் முதல் 14 நாள் வரை - 3%
15 நாள் முதல் 29 நாள் வரை - 3%
30 நாள் முதல் 45 நாள் வரை - 3%
46 நாள் முதல் 90 நாள் வரை - 3.25%
91 நாள் முதல் 179 நாள் வரை - 4%
180 நாள் முதல் 270 நாள் வரை - 4.4%
271 நாள் முதல் 1 வருடம் வரை - 4.5%
1 வருடம் - 5.10%
1 வருடம் முதல் 2 வருடம் வரை - 5.10%
2 வருடம் முதல் 3 வருடம் வரை - 5.10%
3 வருடம் முதல் 5 வருடம் வரை - 5.25%
5 வருடம் முதல் 10 வருடம் வரை - 5.25%

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News