Post office Extends service: இனி தபால்நிலையத்திலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்!

இந்தியா போஸ்ட் இப்போது நாட்டின் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் பதிவு மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பம் போன்ற பல வசதிகளை வழங்கி வருகிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 26, 2021, 06:23 PM IST
  • தபால்நிலையத்திலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
  • பாஸ்போர்ட் சர்வதேச பயணத்திற்கான முக்கியமான ஆவணம்
  • தபால் நிலையத்தின் பொதுவான சேவை மைய கவுண்டர்களில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
Post office Extends service: இனி தபால்நிலையத்திலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்! title=

வெளிநாட்டுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு தேவைப்படும் முக்கியமான ஆவணம் பாஸ்போர்ட். இதற்காக இனிமேல் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள தபால் நிலையத்திலேயே விண்ணப்பிக்கலாம்.  

பாஸ்போர்ட் இந்திய குடிமக்களுக்கு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும், இது வெறும் அடையாள ஆதாரம் மட்டுமல்ல, சர்வதேச பயணத்திற்கான முக்கியமான ஆவணமாகும். வெளிநாடுகளில் இந்திய குடிமகன் என்பதற்கான ஒரே சான்றாக இருப்பது பாஸ்போர்ட் மட்டுமே.

இந்தியா போஸ்ட் (India Post) இப்போது நாட்டின் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் பதிவு மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பம் போன்ற பல வசதிகளை வழங்கி வருகிறது. தபால் நிலையத்தின் பொதுவான சேவை மையம் (Common Service Center) கவுண்டர்களில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.  

Also Read | வீட்டில் இருந்த படியே நிமிடங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணபிப்பது எப்படி?

இந்த புதிய சேவை குறித்தத் தகவல்களை இந்தியா போஸ்ட் ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது. அதில், "உங்கள் அருகிலுள்ள தபால் நிலைய சிஎஸ்சி கவுண்டரில் பாஸ்போர்ட்டுக்கு பதிவு செய்வதும், விண்ணப்பிப்பம் சுலபம். மேலதிக தகவலுக்கு உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகவும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பல தபால் நிலையங்களில் ஏற்கனவே இருக்கும் பாஸ்போர்ட் சேவா மையம் அல்லது பாஸ்போர்ட் சேவா கேந்திராவிலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இதுவரை, பாஸ்போர்ட் சேவா கேந்திராவுக்கு சென்றுதான் பாஸ்போர்ட் பெற  வேண்டியிருந்தது, ஆனால் இப்போது உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்திலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி வந்துவிட்டது.  

எப்படி விண்ணப்பிப்பது?

passportindia.gov.in வலைதளத்தில் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் இவை:, பாஸ்போர்ட் சேவை மையம் மற்றும் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் ஆகியவை பாஸ்போர்ட் அலுவலகத்தின் கிளைகளாகும், அவை பாஸ்போர்ட் வழங்குவதற்கான முன்கள சேவைகளை வழங்குகின்றன. பாஸ்போர்ட் பெறுவதற்கான டோக்கன் முதல் விண்ணப்பம் வரை அனைத்து சேவைகளும் இந்த மையங்களிலேயே கிடைக்கும்.

நீங்கள் ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும், தேதி கிடைத்ததும், ரசீது மற்றும் பிற அசல் ஆவணங்களின் கடின நகலுடன் பாஸ்போர்ட் சேவா கேந்திராவின் தபால் நிலையத்திற்கு செல்ல வேண்டும். இங்கே உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்படும், அதன் பிறகு உங்கள் பாஸ்போர்ட் தொடர்பான தகவல்கள் எஸ்எம்எஸ் மூலம் வழங்கப்படும். இந்த செயல்முறைகளுக்கு சுமார் 15 நாட்கள் ஆகும்.

Also Read | தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை எப்படி சேர்ப்பது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News