சிறந்த முதலீட்டுத் திட்டம்: எதிர்காலத்தைப் பற்றி இப்போதிலிருந்து திட்டமிட்டால், ஓய்வு காலத்தில் எவரையும் சாராமல் நிம்மதியாக கழிக்கலாம்.  பணத்தை பெருக்கும் சிறந்த முதலீட்டுத் திட்டம்  SIP. ஒரு நாளைக்கு 500 ரூபாய் முதலீட்டில் 10 கோடிக்கும் அதிகமான நிதியை எப்படி உருவாக்குவது என்பதை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலீட்டுக்கான 70:30  ஃபார்முலா


உங்கள் வயது 25 முதல் 30 வயது வரை இருந்தால், இந்த நேரத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிறிய முதலீட்டில்  நிதியை பெருக்குவது என்பதை அறியலாம். தற்போது உங்கள் சம்பளம் ரூ.50,000 என்றால், 70:30 என்ற ஃபார்முலாவின்படி, ஒவ்வொரு மாதமும் 15 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதாவது, இந்த முதலீடு ஒவ்வொரு மாதமும் 15 ஆயிரம் ரூபாய்.


மேலும் படிக்க | எதற்காக டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை நாம் எடுக்க வேண்டும்?


ஒரு நாளைக்கு 500 ரூபாய் மட்டுமே சேமிப்பு


தினசரி சிறிய முதலீடுகளைச் செய்வதன் மூலம், பெரிய அளவில் நிதியை பெருக்க முடியும். உங்களுக்கு இப்போது 25 வயது என்று வைத்துக்கொள்வோம். நாங்கள் சொல்லும் திட்டத்தை 30 வருடங்கள் செய்ய வேண்டும். அதாவது, 25 வயதில் முதலீடு செய்ய ஆரம்பித்தால், 55 வயதில் 10 கோடி நிதி இருக்கும். மறுபுறம், 30 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், 60 வயதில் 10 கோடிகளுக்குச் சொந்தக்காரர் ஆவீர்கள்.


ஒரு நாளைக்கு 500 ரூபாய் என்றால் ஒவ்வொரு மாதமும் 15000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் தொகையை SIP செய்வதன் மூலம், 10 கோடி ரூபாய் நிதியை எளிதாகப் பெறுவீர்கள். கடந்த சில ஆண்டுகளில், மியூச்சுவல் ஃபண்டுகள் (எம்எஃப்) 15 முதல் 20 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளன. மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்தால், 30 ஆண்டுகளில் 54 லட்சம் ரூபாய் முதலீடு. இதில் 15% வருமானம் கிடைத்தால், 30 ஆண்டுகளில் இது ரூ.10.51 கோடியாக அதிகரிக்கும்.


30 ஆண்டுகள் முதலீடு


ஒரு நாளைக்கு 500 ரூபாய் அதாவது ஒரு மாதத்திற்கு 15000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் தொகையை 30 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்வதன் மூலம், 15 சதவீத ரிட்டர்ன் விகிதத்தில் முதிர்ச்சியின் போது 10 கோடிக்கு மேல் உங்கள் கையில் இருக்கும்.


(துறப்பு: பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வது ஆபத்துக்கு உட்பட்டது. எந்த வகையான முதலீட்டையும் செய்வதற்கு முன், தயவுசெய்து ஒரு நிபுணரை அணுகவும்.)


மேலும் படிக்க | SIP முதலீட்டில் ஏகப்பட்ட லாபம்: இந்த அம்சங்களில் தெளிவு தேவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR