Best Qualities Of A Leader : தலைமை பதவியில் இருக்கும் அனைவருக்கும் தலைமைத்துவம் இருப்பதில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு கீழ் வேலை செய்யும் பலருக்கு தோன்றியிருக்கும். ஒரு நல்ல தலைவருக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா? இங்கு அது குறித்து பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிறருக்கு ஊக்கம் கொடுப்பது:


நல்ல தலைவராக இருப்பவர்கள், தான் மட்டுமன்றி தன்னை சுற்றி இருப்பவர்களும் நன்றாக வளர வேண்டும் என்று விரும்புவர். அதே போல, தான் வளர்கையில், உடன் சிலரை சேர்த்து வளர்த்து விடுவர். எதிர்காலம் குறித்து சிந்திக்கும் இவர்கள், பிறருக்கு எப்போதும் ஊக்கமளிக்கும் வகையில் பேசுவர். இவர்கள் பேசுவதை கேட்பதற்கும், இவரது செயல்களை பின்தொடர்வதற்கும் கூடவே சில ஆட்கள் இருப்பர். 


புரிந்துணர்வு திறன்:


நல்ல தலைவராக இருப்பவர்கள், தனது குழுவில் அல்லது தனக்கு கீழ் இருப்பவர்களின் நலனில் எப்போதும் அக்கறை காட்டுவர். அவர்களின் கவலைகள், பிரச்சனைகள் அனைத்திற்கும் செவி சாய்க்கும் இவர்கள், அனைத்து கோணங்களில் இருந்தும் ஒரு விஷயத்தை ஆராய்ந்து அதற்கு தகுந்த தீர்வு என்னவோ அதை வழங்குவர். இது, ஒரு நபருக்கு அல்லது இருவருக்கு மட்டும் உதவுவதோடு மட்டுமன்றி, அனைவருக்கும் நன்மை பயக்கும். இதனால் ஒருவர் தாெழில் ரீதியாக வளர்வதுடன், தனிப்பட்ட முறையிலும் வளருவர். 


பயணுள்ள பேச்சுகள்:


நல்ல தலைவர்களுக்கு தேவையில்லாமல் எந்த இடத்திலும் பேச பிடிக்காது. தான் கூற வரும் விஷயத்தையும் சுருங்க சொல்லி, பிறருக்கு அதை அழகாக புரிய வைப்பர். அதே போல, தன்னால் தவறான புரிதல் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக, அனைத்தையும் தெளிவாக விளக்குவர். பிறர் பேசுகையில் அவர்களை இடைமறிக்காமல் இருக்கும் தன்மையும் இவர்களுக்கு இருக்கும்.


முடிவெடுக்கும் திறன்:


எந்த நேரத்தில், எந்த கடினமான சூழலாக இருந்தாலும் அங்கு அவசரமாக எந்த முடிவையும் எடுக்காமல் நிதானமாக யோசித்து முடிவு எடுப்பர். அந்த முடிவு அவர்களின் உள்ளுணர்வு கூறுவதாக இருக்கலாம், அல்லது பிறரின் நலனுக்காக இருக்கலாம். எதுவாக இருப்பினும் அந்த முடிவு நல்ல முடிவாகவே இருக்கும். 


பொறுப்புணர்வு:


ஆளுமை திறன் நிறைந்தவர்கள், தாங்கள் செய்த செயலுக்கான பொறுப்பை, தாமாக முன்வந்து ஏற்றுக்கொள்வர். தனது நெறிமுறையும், தார்மீகமும் கெட்டுப்போகாமல் இருக்கும் வகையில் இவர்கள் நடந்து கொள்வர். இதனால், இவர்கள் பொறுப்பை தேடி போக வேண்டாம், பொறுப்பே இவர்களை தேடி வரும்.


மேலும் படிக்க | திருமண உறவில் புரிதலை அதிகமாக்க... தம்பதிகள் செய்ய வேண்டியவை என்னென்ன?


அதிகாரத்தை சரியாக பயன்படுத்துதல்:


நல்ல தலைவராக இருப்பவர் இடத்தில் அதிகாரம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த அதிகாரத்தை அவர்கள் எந்த இடத்திலும், எந்த நிலையிலும் துஷ்பிரயோகம் செய்யாமல் இருப்பர். இதனால் இவருக்கு கீழ் இருப்பதாக யாரும் நினைக்க மாட்டார்கள், அவருடன் சேர்ந்து வேலை பார்ப்பதாகத்தான் நினைப்பார்கள். இதுதான் ஒரு நல்ல நிறுவனத்திற்கு அல்லது ஆட்சிக்கு அடித்தளமாக அமையும். 


கம்-பேக் கொடுக்கும் தன்மை:


வாழ்வில் அனைவருக்குமே பிரச்சனைகளும் மன உளைச்சல்களும் வரத்தான் செய்யும். ஆனால், அதை எப்படி ஒருவர் கையாண்டு பின்னர் மீண்டு வருகிறார் என்பதில்தான் சூட்டசுமம் அடங்கியிருக்கிறது. தலைமைத்துவத்தில் இருப்பவர்கள், எவ்வளவு பெரிய இழப்பை சந்தித்தாலும், அவர்களின் மனம் எப்படி நொறுங்கி போயிருந்தாலும் அவர்களால் அதிலிருந்து மீண்டும் பன்மடங்கு பலத்தோடு திரும்ப வர முடியும். 


மேலும் படிக்க | மனதிற்குள் பயம் இருந்தாலும் வெளியில் தைரியமாக இருப்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ