திருமண உறவை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் எடுத்துச் செல்வதற்கு நிறைய பொறுமை, அமைதி, நிதானம் அவசியம்.இவற்றில் கவனமாக இருக்கும்பட்சத்தில் மண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவளை ரசிப்பதை நிறுத்தாதே


மனைவியாக வந்தவரை ரசிக்கவும், வசீகரிக்கவும் நிறுத்தவே கூடாது. நம்மை வந்திருக்கும் துணைக்கு உங்களுடைய இதயத்தின் அன்பை முழுமையாக கொடுக்க வேண்டும். அதனை அவரும் உணர வேண்டும். நல்ல பொழுதுகளில் எல்லாம் மனைவியை ஆச்சரியப்படுத்துங்கள், பிரியப்படுத்துங்கள். 


மேலும் படிக்க | கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை!


திருத்த முயற்சிக்க வேண்டாம்


திருமணத்திற்குப் பிறகு மனைவியை மாற்றும் பழக்கம் பலருக்கு உள்ளது. இது நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. அவள் மாறினால், நீங்கள் அவளை காதலிக்க மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் முதலில் விழுந்த பெண் அவள் இல்லை. நீங்கள் அவளை மாற்ற முயற்சிக்கிறீர்கள் என்றால், அவள் அதை விரைவில் உணர்ந்து அவளை விரக்தியடைய வாய்ப்புள்ளது.


பொம்மையல்ல மனைவி


உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் பொம்மை அல்ல மனைவி. நீங்கள் கைதட்டும்போது, ஆடச் சொல்லும்போது, பாடச் சொல்லும்போது செய்யும் குரங்குளை போல் நடத்தக்கூடாது. மனைவியை முழுமையாக புரிந்து நடந்து கொள்ள வேண்டும். 


சமாதானத்தில் இருக்கும் மகிழ்ச்சி


நிதானம் இழந்து கோபமாகவோ அல்லது வருத்தப்படும்போது அவளுக்கு நீங்கள் ஆறுதலாக இருங்கள். அவளை பிடித்து எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுங்கள், ஆலோசகராக இருக்காமல், நம்பிக்கைக்குரியவராக இருப்பது அவசியம். தவறுகளுக்காக காயப்படுத்துவதை செய்யாதீர்கள். நியாமாக உங்களுக்கு பட்டாலும், அவர்கள் மனதில் அது மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்கும். 


பணம் விஷயத்தில் சுதந்திரம்


பணம் விஷயத்தில் கொஞ்சம் சுதந்திரத்தை மனைவிக்கு கொடுப்பது அவசியம். சிக்கனமாக இருக்கிறோம் என்பதற்காக அவள் விரும்புவதையெல்லாம் தடுக்கும் நபராக இருக்க வேண்டாம். சில இடங்களில் விட்டுகொடுத்து செல்ல வேண்டும். சின்ன சின்ன விஷயங்களில் மட்டுமே அளவு கடந்த மகிழ்ச்சி இருக்கிறது. 


மேலும் படிக்க | Jackpot! இந்த ₹1 நாணயம் உங்க கிட்டே இருக்கா... 10 கோடி ரூபாயை அள்ளலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ