பொதுவாக ஒரு உறவுக்குள் ஒற்றுமை என்பது இருக்க வேண்டும், ஆனாலும் எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான எண்ணம் இருக்கக்கூடாது. உதாரணமாக ஒரே மாதிரியான செயல்பாடுகள், ஒரே மாதிரியான உணவுகள், ஒரே உரையாடல்கள் போன்ற பல விஷயங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அந்த உறவில் பெரிதாக சுவாரஸ்யம் இருக்காது. கொஞ்சமாவது சில விஷயங்களில் மாற்று கருத்துக்கள் இருக்க வேண்டும், நமது துணையின் தேவையறிந்து, விருப்பமறிந்து அதனை நாம் நிறைவேற்றுவதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும், அப்போது தான் உங்களது உறவும் பலப்படும். நமது துணைக்கு இருக்கும் மாறுபட்ட விருப்பங்களை கேட்டறிவது ஆர்வத்தை தூண்டும், உங்கள் துணையிடம் நீங்கள் எந்த மாதிரியான விஷயங்களை கேட்டறிய வேண்டும் என்பது பற்றி பின்வருமாறு காண்போம்.
மேலும் படிக்க | உங்கள் துணையிடம் இந்த விசயத்தை மட்டும் பண்ணிடாதீங்க!
1) உங்கள் துணையின் குழந்தைப்பருவம் மற்றும் குடும்ப உறவுகள் பற்றிய வரலாறை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் ஆரம்பகால வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலம் அவர்களுக்கு பிறருடன் ஏற்பட்ட மோதல்கள் தொடங்கி அவர்கள் பற்றிய எல்லாவிதமான தகவல்களையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
2) உங்கள் இருவருக்குமான உறவை பற்றி நீங்கள் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும், அதாவது உங்கள் துணையின் சமூக, காதல் மற்றும் பாலியல் போன்ற அனைத்து வித தொடர்புகளையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் துணையின் கடந்த கால சவால்களை அறிந்துகொள்வது உங்களது எதிர்காலத்தை சிறப்பிக்கும்.
3) தன் துணையின் மேல் வைத்திருக்கும் அன்பை அவர்களிடம் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பது பற்றிய எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். உங்கள் துணையிடம் நீங்கள் கூற விரும்பும் வார்த்தைகள், செயல்கள் மற்றும் நீங்கள் விரும்பும் அனுபவங்களை வெளிப்படையாகக் கூறவேண்டும். சூழ்நிலை, காலம் நேரத்தை பொறுத்து இந்த விருப்பத்தேர்வுகள் மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
4) பொதுவக உறவில் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டியது அவசியம். தூண்டுதல்கள், ஏமாற்றங்கள் மற்றும் கடந்த கால, நிகழ்கால அல்லது எதிர்காலத்தில் எழும் பிற சவால்களின் பட்டியலைப் கவனிக்க வேண்டும். உறவில் ஏற்படும் சவால்களை இருவரும் சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
5) பாலியல் ரீதியில் உங்களுக்கு இருக்கும் விருப்பத்தை உங்கள் துணையிடம் தயங்காமல் நீங்கள் தெரிவிக்க வேண்டும். அதில் தொடுதல், கற்பனைகள், எரோடிஸிசம், கின்க் போன்றவை இதை அடங்கும். உங்கள் துணையின் பாலியல் தேவைகளையும், விருப்பங்களையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
6) உங்கள் துணையிடம் இருக்கும் கனவுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி கேட்டறிந்து கொள்ளுங்கள் உங்களுடைய கனவுகள் மற்றும் எதிர்கால விருப்பங்கள் பற்றியும் நீங்கள் வெளிப்படையாக கூறுங்கள். தூங்கும் போது உங்கள் உண்மையான கனவுகளை துணையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். 5, 10, 15 மற்றும் 20 ஆண்டுகால உங்களின் கனவு திட்டங்களைப் துணையிடம் தெரிவியுங்கள்.
மேலும் படிக்க | மனைவியுடன் சண்டைக்கு பிறகு கணவன் செய்ய வேண்டியவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ