இந்திய அரசு அதிகமான சேமிப்பு  திட்டங்களை அஞ்சல் அலுவலகங்கள் வாயிலாக மக்களுக்கு அளிக்கிறது.  அதில் பெண்களுக்கு என்று சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு சேமிப்பு திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம்.  இதன்மூலம் பலரும் பயன்பெற்று வரும் நிலையில், இதே போல ஆண்களுக்கென்றும் சேமிப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது.  இந்த திட்டத்தின் பெயர் PPF(public provident fund account), இதனை ஆண்மகனுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டம் என்றும் கூறலாம்.  இந்திய குடிமகன்கள் அனைவரும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று கொள்ள முடியும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | வங்கி கணக்கை பயன்படுத்தாமல் விட்டால் என்ன ஆகும்?


இந்த திட்டத்தில் சேர்வதற்கு, அஞ்சலகத்தில் இந்த சேமிப்பு கணக்கை தொடங்க போகும் நபர் அவரது ஆதார் கார்டு மற்றும் புகைப்படங்களை கொடுத்து கணக்கை தொடங்கி  கொள்ளலாம்.  18 வயதிற்கு குறைவானவராக இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தைகளது பெற்றோர் அல்லது பாதுகாவலர் யாரேனும் அந்த கணக்கை தொடங்கி கொள்ளலாம்.  ஆனால் அந்த கணக்கை தொடங்க குழந்தையின் பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு மற்றும் புகைப்படங்களை கொடுக்க வேண்டும்.



இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக மாதம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ,1.5 லட்சம் வரை செலுத்தி கொள்ளலாம்.  சரியாக 1 வருடம் பணம் கணக்கில் செலுத்தாவிடில் ரூ.50 அபராதம் விதிக்கப்படும்.  மாதம் ரூ.500 செலுத்தினால் 7.1% வட்டியுடன் 15 வருடம் கழித்து ரூ.1,57,725 பெற்று கொள்ளலாம், அதுவே மாதம் ரூ.1000 செலுத்தினால் 15 வருடம் கழித்து ரூ.3,15,572 கிடைக்கும்.  ரூ.2000 கட்டுபவர்களுக்கு 15 வருடம் கழித்து ரூ.6,31,135 கிடைக்கும். 


சரியான அளவில் வட்டி கிடைக்க வேண்டுமெனில் மாதந்தோறும் தவறாமல் 5-ம் தேதிக்குள் பணம் செலுத்திவிட வேண்டும்.  மொத்தமாக 15 வருடங்கள் பணம் செலுத்த வேண்டும்.  இந்த கணக்கை தொடங்கிய 1 வருடம் கழித்து, இந்த திட்டத்தின் மூலம் கடன் உதவி பெற்றுக்கொள்ள முடியும்.  அதேபோல கணக்கை தொடங்கி 5 வருடங்கள் கழித்த பின்னர் தான் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.


ALSO READ | SBI வாடிக்கையாளர்களே ஜாக்கிரதை; அதிகரித்தது வட்டி விகிதங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR