வங்கி கணக்கை பயன்படுத்தாமல் விட்டால் என்ன ஆகும்?

சேமிப்பு கணக்கு 1 வருட காலம் வரை வங்கி மூலமாகவோ அல்லது ATM மூலமாகவோ எவ்வித பண பரிவர்த்தனை செய்யாதிருக்கும் பட்சத்தில் சேமிப்பு கணக்கு "INACTIVE" நிலைக்கு சென்றுவிடும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 15, 2021, 01:00 PM IST
  • வங்கி மூலமாகவோ அல்லது ATM மூலமாகவோ எவ்வித பண பரிவர்த்தனை செய்யாதிருக்கும் பட்சத்தில் சேமிப்பு கணக்கு "INACTIVE" நிலைக்கு சென்றுவிடும்.
  • 2 வருடம் செயல்படாமல் இருந்ததால் அதற்கேற்ற அபராத தொகையை செலுத்துவதன் மூலம் மீண்டும் பழைய கணக்கை பயன்படுத்த முடியும்.
வங்கி கணக்கை பயன்படுத்தாமல் விட்டால் என்ன ஆகும்? title=

நீங்கள் வங்கியில் கணக்கு தொடங்கியதிலிருந்தே எந்தவித பண பரிவர்த்தனையும் செய்யாமல் இருக்கிறீர்களா? அப்போ இந்த தகவல் கண்டிப்பா உங்களுக்கு தான் பயன்படும்.  பொதுவாக எந்த வங்கியில் நீங்கள் சேமிப்பு கணக்கு தொடங்கினாலும் அதில் 1 வருட காலம் வரை நீங்கள் வங்கி மூலமாகவோ அல்லது ATM மூலமாகவோ எவ்வித பண பரிவர்த்தனை செய்யாதிருக்கும் பட்சத்தில் உங்களது சேமிப்பு கணக்கு "INACTIVE" நிலைக்கு சென்றுவிடும்.

ALSO READ | 7th Pay Commission பம்பர் செய்தி: அகவிலைப்படி அரியர் தொகை குறித்த முக்கிய அப்டேட்

அதனையடுத்து தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு இதே போல் வங்கியில் பண பரிவர்த்தனை எதுவும் செய்திடாத நிலையில் உங்களது வங்கி கணக்கு "DORMANT(செயலற்ற நிலை)" நிலைக்கு சென்றுவிடும்.  வங்கி கணக்கு நம்முடைய தேவைக்கு தானே, அதில் ஏன் இத்தகைய செயல்முறை என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் இது தான் அனைத்து வங்கிகளிலும் பொதுவாக கடைபிடிக்கப்படும் விதிமுறை ஆகும்.

ஆனால் இவ்வாறு உங்களது கணக்கு முடுக்கப்படுவதாலும், வாங்கி கணக்கை முழுமையாக நீங்கள் கிளோஸ் செய்யாமல் இருப்பதாலும் மற்ற வங்கிகளில் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ? என்ற பயம் உங்களுக்கு தேவையில்லை.  இதனால் உங்கள் CIBIL ஸ்கோர் ஒருபோதும் பாதிக்கப்படாது.  CIBIL ஸ்கோர் என்பது நீங்கள் வாங்கும் லோனை loan பொருத்தது.  இவ்வாறு 2 வருடங்கள் முடங்கிய கணக்கை மீண்டும் உங்களால் புதுப்பித்துக்கொள்ள இயலும்.  ஆனால் 2 வருடம் செயல்படாமல் இருந்ததால் அதற்கேற்ற அபராத தொகையை செலுத்துவதன் மூலம் மீண்டும் உங்களது பழைய கணக்கை பயன்படுத்த முடியும்.

bank

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வரை DORMANT செய்யப்பட்ட கணக்கு பத்திரமாக இருக்கும், ஏனெனில் சிலருக்கு பழைய கணக்கின் தேவைகள் ஏற்படும், அதனால் வங்கியில் இவை பாதுகாப்பாக இருக்கும்.  ஒவ்வொரு மாதமும் குறைந்தது ரூ.500 அல்லது ரூ.1000 என உங்களால் முடிந்த தொகையை வங்கியில் செலுத்தி பரிவர்த்தனை மேற்கொள்வது அவசியமாகும்.

ALSO READ | ITR முதல் PF வரை; December 31க்குள் இந்த பணிகளை செய்து முடிக்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News