நமது உடலில் உள்ள உறுப்புகளை போலவே தற்போது ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டது.  மக்களின் மனதிற்கு பிடித்த வகையில் பல நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஸ்மார்ட்போன்களை சந்தையில் களமிறக்கி வருகின்றது. குறைந்த விலை தொடங்கி லட்சக்கணக்கான ரூபாய் வரை அன்றாடம் பல்வேறு அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்கள் வந்து கொண்டிருக்கின்றன.  பெரும்பாலானோர் குறைந்த விலையில் சிறப்பான ஸ்மார்ட்போன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள், அப்படி பட்ஜெட் விலையில் நல்லவிதமான ஸ்மார்ட்போன்களை வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு பொன்னான நேரமாக கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ஐபிஎல் இலவசமாக பார்க்க ஜியோவின் எந்த பிளானை ரீச்சார்ஜ் செய்யலாம்?


இந்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ இந்திய சந்தையில் மலிவு விலைக்கு கிடைக்கிறது.  ஹீலியோ ஜி85 ப்ராசசர் பேக் கொண்ட இந்த மொபைலானது தொடக்கத்தில் ரூ.13,499க்கு விற்பனை செய்யப்பட்டது.  தற்போது இந்த ஸ்மார்ட்போனானது அமேசானில் மிக குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.  விலை குறைப்பு மட்டுமில்லாமல் எக்ஸ்சேஞ் சலுகை, வங்கி சலுகை போன்றவற்றை மக்களுக்கு வழங்குகிறது.  இந்த டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்  அமேசானில் 20 சதவீத பிளாட் தள்ளுபடியுடன் ரூ.10,799க்கு கிடைக்கிறது.


வங்கி க்ரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் சலுகையாக ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.  அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் க்ரெடிட் கார்டு பயனர்களாக இருப்பின் அவர்களுக்கு உடனடி சலுகையாக 10% தள்ளுபடி வழங்கபடுகிறது.  ஹெச்டிஎப்சி மில்லினியா க்ரெடிட் கார்டு பயனாளர்களுக்கு 5 சதவீதம் வரை கேஷ்பேக் ஆஃபரும், ஹெச்எஸ்பிசி கேஷ்பேக் காரோடுகளுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.  இந்தவகை ஸ்மார்ட்போன்கள் 6.8 இன்ச் ஐபி எல்சிடி டிஸ்பிளேவுடன், 1080 x 2460 பிக்சல் ரிசொல்யூஷனுடன் கிடைக்கிறது.



மேலும் 500 நீட்ஸ் மேக்ஸ் பிரைட்னஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் தொடுதிறனுடன் வருகிறது.  இது மீடியா டேக் ஹீலியோ ஜி85 ஆக்டா-கோர் ப்ராசசரால் இயக்கப்படுகிறது, டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோவானது மாலி-ஜி52 எம்சி2 ஜிபியூ வை கொண்டுள்ளது, அதோடு ஆண்ட்ராய்டு 11 + ஹெச்ஐஓஎஸ் 7.6 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது.  64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் கொண்ட இந்த மொபைலானது இன்டர்ஸ்டெல்லர் பிளாக் மற்றும் டர்க்கைஸ் சியான் நிறத்தில் கிடைக்கிறது.  மேலும் 5000எம்எஹெச் பேட்டரியுடன் 33w யூஎஸ்பி-சி சார்ஜிங்கை கொண்டுள்ளது.  முன்னும், பின்னும் 8எம்பி கேமராவுடன் சிறந்த போட்டோ மற்றும் வீடியோ கால்களுக்கு இரண்டு எல்இடி லைட்டுகளை கொண்டுள்ளது.


மேலும் படிக்க | அட்டகாசமான Poco 5G போன் வெறும் ரூ. 1249: அசத்தும் பிளிப்கார்ட்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR