மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: பிப்ரவரி 2 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சாமானியர்களுக்கான பல ஒதுக்கீடுகள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கான புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி செலுத்துபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் கீழ், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (எஸ்சி எஸ்எஸ்) அதிகபட்ச முதலீடு ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட்டி விகிதமும் அதிகரித்தது


மார்ச் 31, 2023 இல் முடிவடையும் காலாண்டில், இந்தத் திட்டத்தின் வட்டி விகிதம் அரசாங்கத்தால் 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2023க்கு முன், இந்த அரசாங்கத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவிகிதம் வட்டி கிடைத்தது. அதிகபட்ச முதலீட்டு வரம்பில் அதிகரிப்பு மற்றும் வருடாந்திர வட்டி விகிததத்தில் அதிகரிப்பின் மூலம், மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் வட்டி வடிவில் சம்பாதிக்கும் வருமானம் முன்பை விட இரட்டிப்பாகும்.


எவ்வளவு பலன் இருக்கும்


முன்னதாக, இந்தத் திட்டத்தில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்ததில், 7.6 சதவீத விகிதத்தில், முதிர்வு நேரத்தில் ரூ.20.70 லட்சம் கிடைத்தது. இது ஆண்டுக்கு 1.14 லட்சம் மற்றும் மாதம் 9.5 ஆயிரம் ஆகும். ஆனால் முதலீட்டு வரம்பு மற்றும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டதால், ரூ.30 லட்சத்தை டெபாசிட் செய்தால், ஐந்து வருட முதிர்வு காலத்தில் ரூ.12 லட்சம் வட்டியுடன் மொத்தம் ரூ.42 லட்சம் கிடைக்கும். இது ஆண்டு அடிப்படையில் 2.4 லட்சம் ரூபாயாகவும் மாத அடிப்படையில் 20 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. அதாவது, முந்தைய ஒன்பதரை ஆயிரம் ரூபாயுடன் ஒப்பிடுகையில், இப்போது மூத்த குடிமக்கள் 20 ஆயிரம் பெற முடியும்.


மேலும் படிக்க | விவசாயிகளுக்கான நிதி பலன் அதிகரிப்பு? - மத்திய அரசு கொடுத்த பதில்! 


திட்டத்தின் விவரம் என்ன? 


'மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்’ நாட்டின் முதியவர்களுக்காக அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தை தொடங்குவதன் நோக்கம் ஓய்வு பெற்றவர்களுக்கு நிதி உதவி வழங்குவதாகும். இத்திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் வட்டி வடிவில் பணம் பெறுகிறார்கள்.


1.5 லட்சம் வரை வரிச்சலுகை


மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில், வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் அரசாங்கத்தால் திருத்தப்படுகிறது. இதில், கணவன்-மனைவி இருவரும் தனித்தனியாகவோ, அல்லது கூட்டுக் கணக்கையோ தொடங்கலாம். இதில் சிறப்பு என்னவென்றால், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், இதில் முதலீடு செய்தால் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெறலாம்.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட், இனி விமானத்தில் இலவசமாகப் பயணிக்கலாம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ