புதுடெல்லி: பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு மீண்டும் பின்னடைவு ஏற்படலாம். பெட்ரோல், டீசலுக்கு அடுத்து தற்போது எல்பிஜியும் நுகர்வோரின் பாக்கெட்டை தளர்த்தப் போகிறது. உலகெங்கிலும் மிகப்பெரிய எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக ஏப்ரல் முதல் அதன் தாக்கம் இந்தியாவிலும் காணப்படும்,  இதன் காரணமாக ஏப்ரல் முதல் எரிவாயு விலை இரட்டிப்பாகலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகளாவிய எரிவாயு பற்றாக்குறை
உலகளாவிய எரிவாயு தட்டுப்பாட்டால், சிஎன்ஜி, பிஎன்ஜி, மின்சாரம் ஆகியவற்றின் விலை உயரும். இதனுடன் தொழிற்சாலைகளில் வாகனங்களை ஓட்டுவதுடன் உற்பத்திச் செலவும் அதிகரிக்கலாம். அதேபோல் அரசின் உர மானிய மசோதாவும் அதிகரிக்கலாம். மொத்தத்தில், இவற்றின் விளைவு சாதாரண மக்கள் மீது மட்டுமே இருக்கப் போகிறது.


மேலும் படிக்க | உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்; இந்திய குடிமக்கள் தற்காலிமாக வெளிபேற இந்தியா அறிவுறுத்தல்


தேவையை பூர்த்தி செய்யவில்லை
ரஷ்யா ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது, அதாவது உக்ரைன் நெருக்கடி காரணமாக இந்த சப்லை பாதிக்கப்படலாம். உலகப் பொருளாதாரம் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து தினம் தினம் மீண்டு வருகிறது. ஆனால் உலகம் முழுவதும் எரிசக்தி தேவை அதிகரித்து வருவதால், அதன் சப்ளை குறையலாம். இதுவே கேஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.


வீட்டு உபயோக விலையில் மாற்றம் ஏற்படலாம்
உக்ரைன் நெருக்கடியின் காரணமாக, ஒரு போர் சூழ்நிலை இருப்பதாகத் தெரிகிறது. இயற்கை எரிவாயுவின் உள்நாட்டு விலையை அரசாங்கம் மாற்றும் இத்னால் ஏப்ரல் முதல் உலக எரிவாயு பற்றாக்குறையின் விளைவு தெரியும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு mmBtuக்கு $ 2.9 இலிருந்து $ 6 முதல் 7 வரை அதிகரிக்கலாம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கூற்றுப்படி, ஆழ்கடல் எரிவாயுவின் விலை $ 6.13 இல் இருந்து $ 10 ஆக உயரும். 


நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் உள்நாட்டு இயற்கை எரிவாயு விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஏப்ரல் விலையானது 2021 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான சர்வதேச விலைகளின் அடிப்படையில் இருக்கும். இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் ஏ.கே.ஜெனா கூறுகையில், உள்நாட்டு இயற்கை எரிவாயுவின் விலையில் ஒரு டாலர் அதிகரித்துள்ளதால், சிஎன்ஜியின் விலை கிலோவுக்கு ரூ.4.5 அதிகரிக்கும். அதாவது சிஎன்ஜியின் விலை கிலோவுக்கு ரூ.15 வரை அதிகரிக்கலாம்.


மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர் மூளுமா; வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எச்சரிக்கை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR