7th Pay Commission: ஊழியர்களின் காத்திருப்பு முடிவடைந்தது! 4% அதிகரிப்புக்கு ஒப்புதல்
DA Hike Dearness Allowance Calculation: ஊழியர்களின் காத்திருப்பு முடிவடைந்தது! 4% அதிகரிப்புக்கு ஒப்புதல்
நியூடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (7வது ஊதியக் குழு) அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவை அதிகரித்தன. இந்த செய்தியை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 42 சதவீதமாக அரசு அறிவித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி (டிஏ) திருத்தப்படும். டிஏ மற்றும் ஊதிய உயர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்பதால், மார்ச் 31ம் தேதிக்குள் ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் அகவிலைப்படியை (டிஏ) மத்திய அரசு திருத்துவது வழக்கமான ஒன்று தான்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. தொழிலாளர் அமைச்சகத்தின் தொழிலாளர் பணியகம் ஒவ்வொரு மாதமும் CPI-IW தரவை வெளியிடுகிறது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை கணக்கிடுவதற்கான பரிந்துரைக்கப்பட்ட ஃபார்முலா ஆகும்.
மத்திய அரசு ஊழியர்கள் இந்த முறை அகவிலைப்படியில் 4 சதவீத உயர்வை எதிர்பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது உண்மையாகியுள்ளது. ஓய்வூதியதாரர்கலுக்கான அகவிலைப்படியும் 4% உயர்ந்தது. உயர்த்தப்பட்டஅகவிலைப்படி, ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும்
அகவிலைப்படி கணக்கீடு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு:
அகவிலைப்படியின் கணக்கீடு: {(கடந்த 12 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு -2001 =100) -115.76)/115.76} x 100.
மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கான அகவிலைப்படி கணக்கீடு:
{(கடந்த 3 மாதங்களுக்கு அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு -2001 =100) -126.33)/126.33} x 100.
அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படியும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்க வகையில், ஒரு ஊழியரின் சம்பள மேட்ரிக்ஸில் உள்ள அளவைப் பொறுத்து அகவிலைப்படி மாறுபடும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அந்த நாள்! வந்தது நல்ல செய்தி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ