Mobile wallet Full KYC: நீங்கள் Paytm, PhonePe, Mobikwik மற்றும் Google Pay போன்ற மொபைல் செயலிகளைப் பயன்படுத்தினால், வரும் நாட்களில் நீங்கள் முழு KYC செய்ய வேண்டியிருக்கும். இதுபோன்ற வாலட் நிறுவனங்கள் விரைவில் தங்கள் வாடிக்கையாளர்களின் முழு KYC செயல்முறையை செய்ய வேண்டும் என மொபைல் வாலட் நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தெளிவான வழிமுறைகளை அளித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கணக்கு திறக்கும் நேரத்தில் KYC


செய்திகளின்படி, மொபைல் நிறுவனங்கள் மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களுக்கு KYC வழிகாட்டுதல்கள் அவசியம்.  KYC-யின் மூலம் வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு சரிபார்க்க முடியும். இது கணக்கு திறக்கும் நேரத்தில் செய்யப்படுகிறது. மேலும் அவ்வப்போது இந்த செயல்முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. வங்கிகளும் அனைத்து KYC விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


ப்ரீபெய்ட் கட்டண கருவிகளுக்கு முன்பு, KYC அவரவரது விருப்பத்தைச் சார்ந்து இருந்தது 


ALSO READ: Forbes பணக்காரர்கள் பட்டியலில் ஜாக்மாவை பின்னுக்கு தள்ளிய முகேஷ் அம்பானி


கார்டுகள் (Cards) மற்றும் வாலட்கள் போன்ற ப்ரீபெய்ட் கட்டணக் கருவிகளுக்கு KYC தேவைப்பட்டால் செய்துகொள்ளும் அம்சமாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி முன்பு 2018 அக்டோபரில் அறிவித்திருந்தது. ஆனால் இப்போது முழு KYC அவசியமாகியுள்ளது.


புதிய வழிகாட்டுதல்களில், வாலட்டின் அவுட்ஸ்டாண்டிங் பாலன்சை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாக ரூபாயாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது. எனினும், மொபைல் வாலட் நிறுவனங்கள் உடனடியாக KYC விதிகளை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்காக, சில நாட்களில் விரிவான வழிமுறைகள் வழங்கப்படும்.


புதிய வழிகாட்டுதல்களில் பணத்தை திரும்பப் பெறுவதற்கான வசதியும் இருக்கும் 


ரிசர்வ் வங்கி (RBI) விரிவான அறிவுறுத்தல்கள் அல்லது விதிகளை வெளியிட்ட பிறகு, ​​இந்த முறை வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இருந்து Paytm மற்றும் Mobikwik போன்ற வாலட்கள் மூலம் பணத்தை எடுக்க முடியும். முன்னதாக இதுபோன்ற வசதி யோனோ எஸ்பிஐயில் கிடைத்தது.


ALSO READ: PMMY: முத்ரா திட்டத்தின் கீழ், 28.68 கோடி பேருக்கு 15 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்கள் வழங்கப்பட்டது


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR