PMMY: முத்ரா திட்டத்தின் கீழ், 28.68 கோடி பேருக்கு 15 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்கள் வழங்கப்பட்டது

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா: நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2015, ஏப்ரல் 8ஆம் தேதியன்று பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தை (PMMY) தொடங்கினார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 8, 2021, 06:16 PM IST
  • முத்ரா திட்டத்தின் கீழ், 28.68 கோடி பேருக்கு 15 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்கள்
  • 2015, ஏப்ரல் 8ஆம் தேதியன்று பிரதான் மந்திரி முத்ரா திட்டம் தொடங்கப்பட்டது
  • 2020 - 21 நிதியாண்டில், 4.20 லட்சம் கோடி அளவிலான PMMY கடன் அங்கீகரிக்கப்பட்டன
PMMY: முத்ரா திட்டத்தின் கீழ், 28.68 கோடி பேருக்கு 15 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்கள் வழங்கப்பட்டது   title=

புதுடெல்லி: பிரதான் மந்திரி முத்ரா யோஜனா: நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2015, ஏப்ரல் 8ஆம் தேதியன்று பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தை (PMMY) தொடங்கினார்.

இந்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தின் (PMMY) கீழ் ஏராளமான மக்கள் பயனடைந்துள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளில் முத்ரா திட்டத்தின் கீழ் 28.68 கோடி பயனாளிகளுக்கு ரூ .4.96 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்களை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வழங்கியுள்ளதாக  நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 

நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2015, ஏப்ரல் 8ஆம் தேதியன்று பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தை (PMMY) தொடங்கினார். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, இன்றுடன் ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

Also Read | SBI YONO பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை! நீங்கள் UPI கொடுப்பனவுகளைப் பயன்படுத்துகிறீர்களா?

அனைவரின் நிதித் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டன 
இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வர்க்கத்தினருக்கும், அவர்களின் நிதித் தேவைகளுக்கும் உதவ அரசு உறுதிபூண்டுள்ளதாக நிதி அமைச்சகம் கூறுகிறது. புதிய தொழில்முனைவோர்கள், கடினமான உடல் உழைப்பை பணியாக கொண்டவர்கள், தொழிலாளிகள், விவசாயிகள் என பல தரப்பு மக்களின் நிதித் தேவைகளும் அரசின் பல்வேறு முயற்சிகள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் முயற்சிகளில் ஒரு முக்கியமான முன்முயற்சி திட்டம், பிரதான் மந்திரி முத்ரா திட்டம். இது கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு உதவுகிறது. மக்கள், சுய மரியாதையுடனும் சுதந்திரமாகவும் செயல்படுவதற்கான வாய்ப்பை இது வழங்கியுள்ளது.

2021 மார்ச் 19ஆம் தேதியன்று இது தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020 - 21 நிதியாண்டில், 4.20 லட்சம் கோடி அளவிலான PMMY கடன் அங்கீகரிக்கப்பட்டது, இதில் ரூ .2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சராசரி கடன் அளவு ரூ 52,000

ஒவ்வொருவரின் கடனின் சராசரி அளவு 52,000 ரூபாய் என்று அது கூறுகிறது. உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைகள் ஆகிய துறைகளில் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்காக இந்த கடன் வழங்கப்படுகிறது. இதன் கீழ், பத்து லட்சம் ரூபாய் வரை உத்தரவாதமில்லாத கடனை, கடன் வழங்கும் நிறுவனங்கள் வழங்குகின்றன.

Also Read | PUBG Mobile விளையாட்டு ஆர்வலர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News