ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி விதியில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்!
ஒரு ஊழியர் கிராஜுவிட்டி பெற வேண்டுமானால் அந்த நிறுவனத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் அப்படி பணியாற்றினால் தான் அவருக்கு கிராஜுவிட்டி வழங்கப்படும்.
ஊழியர்களின் நலனை கருத்திற்கொண்டு மத்திய அரசு 4 புதிய தொழிலாளர் குறியீடுகளை விரைவில் அமல்படுத்த போவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி தெரிவித்துள்ளார். இந்த புதிய தொழிலாளர் குறியீடு அமலுக்கு வந்த பிறகு, ஊழியர்களின் சம்பளம், விடுப்பு, வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராஜுவிட்டி போன்றவற்றில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் கிராஜுவிட்டி பெற ஊழியர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்கிற நிபந்தனை இருக்காது, இருப்பினும் அரசு இதுகுறித்து தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை.
மேலும் படிக்க | உசார் மக்களே! அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை!
தற்போது அமலில் இருக்கும் கிராஜுவிட்டி விதியின் அடிப்படியில் ஒரு ஊழியர் கிராஜுவிட்டி பெற வேண்டுமானால் அந்த நிறுவனத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும், அப்படி பணியாற்றினால் தான் அவருக்கு கிராஜுவிட்டி வழங்கப்படும். 5 ஆண்டுகளுக்கு பிறகு அவர் நிறுவனத்தை விட்டு வெளியேறியதும் சம்பளத்தின் அடிப்படியில் அந்த நபருக்கு கிராஜுவிட்டி கொடுக்கப்படுகிறது. இப்போது ஒருவர் ஒரு நிறுவனத்தில் 10 ஆண்டுகள் வேலை செய்கிறார் என்றால் கடைசி மாதத்தில் அவரது கணக்கில் ரூ.50,000 சேரும், அவரது அடிப்படை சம்பளம் ரூ.20,000 மற்றும் டிஏ ரூ.6,000 மொத்தம் ரூ.26000 ஆக இருக்கும். இந்த ரூ.26,000ஐ வைத்துதான் கிராஜுவிட்டி கணக்கிடப்படும், இதில் கிராஜுவிட்டி 26 நாளாக எடுத்துக்கொள்ளப்படும்.
- 26,000 / 26 ஒரு நாளைக்கு ரூ.1000
- 15X1,000 = 15000
ஊழியர் 15 ஆண்டுகள் பணிபுரிந்தால், அவர் மொத்தமாக 15X15,000 = ரூ.75000 கிராஜுவிட்டியாக பெறுவார். தற்போது கிராஜுவிட்டி குறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி ஒரு நபர் எந்தவொரு நிறுவனத்திலும் ஒரு ஆண்டு வேலை செய்தாலும் அவருக்கு கிராஜுவிட்டி வழங்கப்படும், இந்த முடிவை முக்கியமாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்களுக்காக அரசாங்கம் எடுத்துள்ளது.
மேலும் படிக்க | Tips and Ticks: வாட்ஸ்அப் மூலம் சுலபமாக ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்வது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ