Government Pension Schemes: தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகளுக்கு அரசின் லட்சிய ஓய்வூதியத் திட்டங்கள் மிகுந்த ஆர்வத்துடன் தொடங்கப்பட்டு, தற்போது மந்தமாக உள்ளது. பதிவு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது மட்டுமின்றி, பட்ஜெட் ஒதுக்கீடும் மாறாமல் உள்ளது அல்லது குறைந்துள்ளது எனன முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கர்க் பட்ஜெட் குறித்த தனது புதிய புத்தகத்தில் இவ்வாறு கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொருளாதாரத்திற்கு அமைப்புசாரா துறையில் பணிபுரியும் 42 கோடி மக்களின் பங்களிப்பைப் பாராட்டி, அரசாங்கம் 2019-20 இடைக்கால பட்ஜெட்டில் 'பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமான 'ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா', அரசின் முக்கிய நலத் திட்டங்களில் ஒன்றாகும்.


ஓய்வூதிய திட்டம்


அப்போது நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில்,"15,000 ரூபாய் வரை மாத வருமானம் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பெரிய ஓய்வூதியத் திட்டத்தை எங்கள் அரசாங்கம் தொடங்க முன்மொழிகிறது. இந்த ஓய்வூதியத் திட்டம் அவர்களுக்கு மாத ஓய்வூதியமாக தொழிலாளர்களின் 60 வயதில் ரூ. 3,000 ரூபாய் முதல் சிறு தொகையாகப் பங்களிப்பதன் மூலம் பலனிக்கும்" என தெரிவித்தார். அதாவது, பட்ஜெட் முன்மொழிவின்படி, இந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 29 வயது தொழிலாளிக்கு 60 வயது வரை மாதம் ரூ.100 வழங்கப்படும். மறுபுறம், 18 வயது நிரம்பிய தொழிலாளி இத்திட்டத்தில் சேர மாதந்தோறும் ரூபாய் 55 செலுத்த வேண்டும். அதே தொகையை அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் ஊழியரின் ஓய்வூதியக் கணக்கில் செலுத்தும். 


மேலும் படிக்க | EPFO pension: ஓய்வூதியம் பெறுபவர்கள் மே 3ம் தேதிக்குள் இந்த வேலைய முடிச்சுருங்க!


ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா


2023-24 பட்ஜெட் பற்றிய 'விளக்கமும் வர்ணனையும்' என்ற தலைப்பில் கார்க் எழுதியுள்ள புத்தகத்தில், "ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா (2019-20) முதல் ஆண்டில், ஏராளமான தொழிலாளர்கள் ஈர்க்கப்பட்டனர். மார்ச் 31, 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, 43 லட்சத்து 64 ஆயிரத்து 744 தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பின்னர் இத்திட்டத்தில் அமைப்புசாராத் துறை தொழிலாளர்களின் ஆர்வம் குறைந்தது. 2020-21 நிதியாண்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 213 தொழிலாளர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின்ன் மொத்த எண்ணிக்கை 44 லட்த்து 94 ஆயிரத்து 864 ஆக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.


பதிவு ரத்து செய்யப்பட்டது


அவர் மேலும் அந்த புத்தகத்தில், "2021-22 நிதியாண்டில், 1 லட்சத்து 61 ஆயிரத்து 837 தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், மார்ச் 31, 2022ஆம் ஆண்டுக்குள் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 46 லட்சத்து 56 ஆயிரத்து 701 ஆக அதிகரித்துள்ளது. ஜனவரி 2023 முதல், தொழிலாளர்கள் பதிவை ரத்து செய்யத் தொடங்கியதாகத் தெரிகிறது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் டேஷ்போர்டின் படி, ஜனவரி 2023இல் 56 லட்சத்து 27 ஆயிரத்து 235-ஐ எட்டிய பிறகு, பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து, இந்த மார்ச் 2023இல் 44 லட்சத்து, 535 ஆக உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஓய்வூதிய திட்டம்


2019-20 நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட்டில், ஐந்தாண்டுகளில் இந்த ஓய்வூதியத் திட்டத்தில் சுமார் 10 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில், இதுவரை பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இது தவிர, 2019-20 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டில், 1.5 கோடிக்கும் குறைவான ஆண்டு வருவாய் கொண்ட மூன்று கோடி சில்லறை வணிகர்கள், சிறு கடைக்காரர்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஓய்வூதியத் திட்டமான பிரதான் மந்திரி கர்ம யோகி மந்தன் யோஜனா என்ற திட்டத்தை அரசாங்கம் தொடங்கியது. இதனுடன், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்காக பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா தொடங்கப்பட்டது.


PM கிசான் மந்தன் யோஜனா


தொழிலாளர் அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, ஏப்ரல் 30, 2023 நிலவரப்படி, 52 ஆயிரத்து 472 சிறு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்கள் கர்மயோகி மந்தன் யோஜனாவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், 19 லட்சத்து 44 ஆயிரத்து 335 விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் மாந்தன் யோஜனாவின் கீழ் இணைக்கப்பட்டுள்ளனர்.


இது 2.5 சதவீத விவசாயிகள் மட்டுமே பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் பயனைப் பெறுகின்றனர். இந்த புத்தகத்தில், 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கான பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் முடிவுகள் குறித்த தகவல்களைத் தெரிவிக்கையில், "இந்த மூன்று ஓய்வூதியத் திட்டங்களும் ஒரு வகையில் செயலிழந்துவிட்டன" என்கிறார். அரசும் இத்திட்டங்களை கைவிட்டதாக தெரிகிறது. திட்டங்களை பிரபலப்படுத்த அரசு தரப்பில் இருந்து பெரிய முயற்சி எதுவும் தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது. 


மேலும் பிடிக்க | OPS-NPS முக்கிய அப்டேட்: தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்தது மாநில அரசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ