ஊழியர்களுக்கு இனி குஷி தான்... அரியர், சம்பள உயர்வை அறிவித்தது மாநில அரசு
7th Pay Commission: 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கணக்கில் இருந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் முதல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை அளவைப் பெறுவார்கள் என மத்திய பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.
7th Pay Commission: மத்திய பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 7ஆவது ஊதியக் குழு ஊதியம் மற்றும் காலக்கெடுவுடன் கூடிய ஊதிய உயர்வு வழங்கப்படும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று அறிவித்துள்ளார். அதாவது, அனைத்து துறை மருத்துவர்களுக்கும் காலக்கெடுவுடன் கூடிய ஊதிய விகிதங்களும், பதவி உயர்வு கட்டாயம் இன்றி ஐந்து, பத்து, பதினைந்து ஆண்டுகளில் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றார்.
"2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கணக்கில் இருந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் முதல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை அளவைப் பெறுவார்கள்" என்றார். சுமார் ரூ. 482 கோடி மதிப்பிலான அவசர மருத்துவப் பிரிவைக் கொண்ட 2000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைத் திறந்து வைத்த விழாவில் சிவராஜ் சிங் சவுகான் உரையாற்றும் போது இதை கூறினார். 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பாரம்பரியமிக்க ஹமிடியா மருத்துவமனை வளாகத்தில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் ரூ.245 கோடி மதிப்பிலான மருத்துவ வசதிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
நாட்டிலேயே முதல் முறை
"நடைமுறையில்லா உதவித்தொகை (NPA) கணக்கீட்டில் உள்ள முரண்பாடுகள் சரி செய்யப்படும். ஒப்பந்தத்தில் உள்ள மருத்துவர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இணையான வசதிகளைப் பெறுவார்கள். அனைத்து துறை மருத்துவர்களும் சம வேலைக்கு சம ஊதியம் பெறுவார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: வருகிறது டிஏ ஹைக்.. இந்த நாளில் வரும் அறிவிப்பு
மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர்களின் ஊதிய விகிதத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும், நகரின் 11 முதியோர் இல்லங்களை இடமாற்றம் செய்வதற்கான விதிகள் எளிமைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மத்திய பிரதேசத்திந் மருத்துவக் கல்வி அதிகாரி விஸ்வாஸ் சாரங் கூறுகையில், "முதலமைச்சர் சவுகான், சுகாதார சேவைகளை மேம்படுத்த அயராது உழைத்து வருகிறார்" என்றார். மேலும் மருத்துவப் படிப்புக் கல்வியை இந்தி மொழியில் அறிமுகப்படுத்தியதை மேற்கோள் காட்டிய அவர், இது நாட்டிலேயே எந்த மாநிலத்திற்கு இல்லாத அளவில் முதல் முறையாக இங்கு செயல்படுத்தப்பட்டதாக கூறினார்.
மத்திய பிரதேச காவல் துறை
மத்தியப் பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் முன்முயற்சிகளைத் தொடர்ந்து நாட்டில் சுகாதார சேவைகள் வெகுவாக மேம்பட்டுள்ளதாக விஸ்வாஸ் சாரங் கூறினார். மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
முன்னதாக, ஆக. 15ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவின் கொடியேற்ற நிகழ்வில் காவல் துறையினருக்கு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். அந்த நிகழ்வில் பேசிய அவர், "'மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறை நண்பர்கள் இரவும் பகலும் உழைக்கின்றனர். போலீஸ் கான்ஸ்டபிள் முதல் சப்-இன்ஸ்பெக்டர் நிலை ஊழியர்கள் வரை உத்தியோகபூர்வ பணிக்காக செல்லும் பயணத்திற்காக மாதம் 15 லிட்டர் பெட்ரோலின் விலையை திருப்பி தர (ரீயெம்பர்ஸ் செய்ய) முடிவு செய்துள்ளோம்" என்றார்.
மேலும், காவல் துறையில் பணியாற்றும் காவலர் முதல் அதிகாரி வரை, அனைவருக்கும் சத்துணவு உதவித் தொகையை ரூ. 650-இல் இருந்து ரூ. 1000 ஆக உயர்த்தியுள்ளோம் எனவும் காவல்துறையினருக்கான கிட் ஆடை உதவித்தொகையை ரூ. 5000 ஆக உயர்த்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க | மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி! உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ