Indian Railways: ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலேயே பயணத் தேதியை மாற்றலாம் தெரியுமா?
Indian Railways: இந்திய ரயில்வேயின் பல விதிகளை பற்றிய போதுமான விழிப்புணர்வு பெரும்பாலானவர்களுக்கு இருப்பதில்லை. இவை அனைத்தையும் மக்கள் தெரிந்துகொண்டால் பல வித வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்திய இரயில்வே: நம் நாட்டு மக்களின் போக்குவரத்தில் இந்திய இரயில்வேயின் பங்கு மிகப்பெரியது. மக்கள் தொகை அதிகமாக உள்ள நமது நாட்டில் ரயில் போக்குவரத்து இணைப்புக்கான உயிர் நாடியாக உள்ளது. இந்தியாவில், ரயில்வே இணைப்பு நாட்டின் உள்கட்டமைப்பில் ஒரு முக்கிய பகுதியாகும். இந்திய இரயில்வே நாட்டிற்குள் பயணம் செய்வதற்கான எளிய, விரைவான மற்றும் செலவு குறைந்த வழியை வழங்குகிறது. மேலும் ஆயிரக்கணக்கான பயணிகள் நீண்ட தூரத்தை கடக்க ரயிலில் பயணம் செய்கிறார்கள்.
இந்திய ரயில்வேயின் பல விதிகளை பற்றிய போதுமான விழிப்புணர்வு பெரும்பாலானவர்களுக்கு இருப்பதில்லை. இவை அனைத்தையும் மக்கள் தெரிந்துகொண்டால் மக்கள் பல வித வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படிப்பட ஒரு முக்கிய விதியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நாம் பல சமய பயணம் செய்ய டிக்கெட் புக் செய்கிறோம். ஆனால் சில எதிர்பாராத காரணங்களினால், நம்மால் புக் செய்த தேதியில் பயணிக்க முடியாமல் போகின்றது. பின்னர் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு மீண்டும் ஒரு முறை வேறு ஒரு தேதியில் டிக்கெட் புக் செய்கிறோம். ஆனால், டிக்கெட்டை கேன்சல் செய்யாமலேயே இந்த பணியை செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்திய இரயில்வேயின் விதியின்படி, உங்கள் பயணச்சீட்டை ரத்து செய்யாமல் பயணத் தேதியை மாற்றலாம், அதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், பயணத்தை வசதியாக மாற்ற, ரயில்வே சில விதிகளை வகுத்துள்ளது. இந்த விதிகளில் ஒன்றைப் பற்றி இங்கே காணலாம்.
மேலும் படிக்க | Indian Railways சூப்பர் செய்தி: பயணிகளுக்கு இலவச உணவு, விவரம் இதோ
டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் பயண தேதியை மாற்றுவது எப்படி?
பெரும்பாலும் மக்கள் பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்கிறார்கள். பயண நேரம் நெருங்கும் போது, திட்டமிடல் மாறி, டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டி வருகிறது.
- ரயில் டிக்கெட்டை ரத்து செய்யாமல் பயண நேரத்தை மாற்றலாம்.
- உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டில் உங்கள் பயணத்தின் தேதியை மாற்ற, ரயில் புறப்படுவதற்கு சுமார் 48 மணி நேரத்திற்கு முன் முன்பதிவு கவுண்டரில் உங்கள் டிக்கெட்டை ஒப்படைக்க வேண்டும்.
- மேலும் பயணித்திற்கான புதிய தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- பயண வகுப்பை மேம்படுத்துவதற்கான விருப்பத்தையும் இங்கே பெறுவீர்கள்.
- விண்ணப்பத்தைப் பெற்ற பிறகு, உங்கள் பயணத்தின் தேதி மற்றும் வகுப்பு இரண்டும் மாற்றப்படும்.
- தேதியை மாற்றுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
- இருப்பினும், நீங்கள் வகுப்பை மாற்றினால், அந்த வகுப்பின் கட்டணத்தின் அடிப்படையில் பணம் வசூலிக்கப்படும்.
இந்த எளிதான வழியில், பயணத்தின் தேதியை மாற்றலாம். இதில் எந்த விதமான பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டி வராது.
இந்திய ரயில்வேயின் இன்னும் சில விதிகளின் விவரங்கள்
ரயிலில் மதுபானம் கொண்டு செல்ல முடியுமா?
ரயிலில் மதுபானங்களை எடுத்துச் செல்வது நீங்கள் பயணிக்கும் மாநிலத்தைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அனைத்து மாநிலங்களுக்கும் மதுபானம் தொடர்பாக அவற்றின் சொந்த விதிகள் உள்ளன. அரசியல் சட்டத்தில், மதுபானம் தொடர்பான விதிகளை அந்தந்த மாநிலங்கள் தங்கள் சொந்த விதிகளுக்கு ஏற்ப உருவாக்கலாம் என்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
மது அருந்திவிட்டு ரயிலில் பயணம் செய்தாலோ, அல்லது மதுபானங்களை எடுத்துச்சென்றாலோ, அப்படி செய்பவர்கள் மீது இந்திய ரயில்வே சட்டம் 1989 பிரிவு 165ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, ரயிலில் தடை செய்யப்பட்ட வேறு ஏதேனும் பொருட்களை யாரேனும் வைத்திருந்தால், அவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மறுபுறம், இந்த பொருளால் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், அந்த நபர் அதையும் ஈடுசெய்ய வேண்டும்.
இரவில் போனை சார்ஜ் செய்ய முடியாது
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ரயிலில் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினிகளை சார்ஜ் செய்ய இந்திய ரயில்வே தடை விதித்துள்ளது. ரயிலில் எந்த வித விபத்தும் ஏற்படாமல் இருக்க இந்திய ரயில்வே இப்படி செய்கிறது. மக்கள் பெரும்பாலும் தங்கள் தொலைபேசியை சார்ஜிங்கில் போட்டுவிட்டு அது முழுமையாக சார்ஜ் ஆனவுடன் சார்ஜை அணைக்க மறந்துவிடுகிறார்கள். சார்ஜிங்கில் போட்டுவிட்டு பயணிகள் தூங்கி விடுவதால், சார்ஜை மூட அவர்களுக்கு பல சமயம் நினைவிருப்பதில்லை.
மேலும் படிக்க | Indian Railways: நம் பெயரில் உள்ள ரயில் டிக்கெட்டை மற்றவருக்கு மாற்றுவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ