இன்றைய காலக்கட்டத்தில், பயணத்தின் போது மொபைல் அல்லது லேப்டாப் பயன்படுத்துவது பயணிகளிடையே மிகவும் பொதுவானதாகி விட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், ரயிலில் உள்ள அனைத்து இருக்கைகளுக்கும் மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்யும் வசதியும் கொடுக்கப்படுள்ளன. ஆனால் ரயிலில் எப்போது வேண்டுமானாலும் உங்கள் போனை சார்ஜ் செய்ய முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்திய ரயில்வே விதிகளின்படி, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ரயிலில் போன் அல்லது லேப்டாப்பை சார்ஜ் செய்ய முடியாது. ஆம், இதற்கான காரணம் மற்றும் இந்த நேரத்தில் சார்ஜ் செய்தால் என்ன ஆகும் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரவில் போனை ஏன் சார்ஜ் செய்ய முடியாது


இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ரயிலில் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினிகளை சார்ஜ் செய்ய இந்திய ரயில்வே தடை விதித்துள்ளது. ரயிலில் எந்த வித விபத்தும் ஏற்படாமல் இருக்க இந்திய ரயில்வே இப்படி செய்கிறது. மக்கள் பெரும்பாலும் தங்கள் தொலைபேசியை சார்ஜிங்கில் போட்டுவிட்டு அது முழுமையாக சார்ஜ் ஆனவுடன் சார்ஜை அணைக்க மறந்துவிடுகிறார்கள். சார்ஜிங்கில் போட்டுவிட்டு பயணிகள் தூங்கி விடுவதால், சார்ஜை மூட அவர்களுக்கு பல சமயம் நினைவிருப்பதில்லை. 


இப்படி மொபைலோ அல்லது லாப்டாப்போ சார்ஜில் போடப்பட்டு, கவனிக்கப்படாமல் நீண்ட நேரம் சார்ஜ் ஆனால், ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலையை தவிர்க்கவே, இரயில்வே தனது பயணிகள் தங்கள் தொலைபேசிகளை இரவில் சார்ஜ் செய்ய தடை விதித்துள்ளது.


இந்த உத்தரவு எப்போது வந்தது


ரயில்வே இது தொடர்பாக எந்த ஒரு புதிய விதியையும் தற்போது அமல்படுத்தவில்லை. இது தொடர்பாக ரயில்வே அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு ரயில்களில் ஏற்படும் தீ விபத்துகளை கட்டுப்படுத்த ரயில்வே வாரியம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்குப் பிறகு, 2021 இல், ரயில்வே அனைத்து மண்டலங்களுக்கும் இதேபோன்ற உத்தரவை பிறப்பித்தது. ஆனால், போதிய தகவல் இல்லாததால், பெரும்பாலான பயணிகளுக்கு இந்த விதி பற்றி இன்னும் தெரியவில்லை.


மேலும் படிக்க | விஜய், அஜித் படங்களை போல் வசூலை குவித்த நெல்லை ரயில் நிலையம்... வரப்போகும் புதிய வசதிகள் என்ன தெரியுமா?


இந்த விஷயங்கள் ரயிலில் தடை செய்யப்பட்டுள்ளன


ரயில்வே விதிகளின்படி, ரயில் பயணத்தின் போது வெடி மற்றும் ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்வது, பட்டாசு, கேஸ் சிலிண்டர், துப்பாக்கி பவுடர் போன்றவற்றை கொண்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனுடன் எரியக்கூடிய எரிபொருளான மண்ணெண்ணெய், பெட்ரோல் போன்ற பொருட்களையும் ரயிலில் கொண்டு செல்ல முடியாது. பயணிகள் ரயிலுக்குள் ஸ்டூப் எரிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனுடன், ரயில் பெட்டியில் அல்லது நிலையத்தில் உள்ள பயணிகள் புகைபிடிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.


மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்


ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 164 மற்றும் 165-ன் கீழ், ரயிலில் பயணிக்கும் போது, பயணிகள் எரியக்கூடிய அல்லது வெடிக்கும் பொருட்களை எடுத்துச் சென்றால், உங்களுக்கு ரூ.1000 வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். நீங்கள் இந்தத் தண்டனையிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பினால், தவறுதலாகக் கூட அலட்சியமாக இருக்காதீர்கள்.


சமீபத்தில் கிடைத்த ஷாக்: மனு தள்ளுபடி


மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் கட்டணத்தில் மீண்டும் சலுகை அளிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் (ஏப். 27) தள்ளுபடி செய்தது. இதனால், மூத்த குடிமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஏனெனில் இனி ரயில் டிக்கெட்டுகளில் கிடைக்கும் தள்ளுபடியின் பலனை அவர்களால் பெற முடியாது. 


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அதிர்ச்சி... உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - இனி ரயில்களில் சலுகை கிடையாது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ