விஜய், அஜித் படங்களை போல் வசூலை குவித்த நெல்லை ரயில் நிலையம்... வரப்போகும் புதிய வசதிகள் என்ன தெரியுமா?

Tirunelveli Railway Station: 2022 - 2023 நிதியாண்டில் முதல் முறையாக, திருநெல்வேலி ரயில் நிலையம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது. இதன்மூலம், நெல்லை ரயில் நிலையத்திற்கு கிடைக்கப்போகும் புதிய வசதிகள் குறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 30, 2023, 08:35 PM IST
  • இதுவரை ரூ. 100 கோடிக்குள் தான் நெல்லை ரயில் நிலையம் வசூல் செய்தது.
  • தற்போது, ரூ. 111.7 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
விஜய், அஜித் படங்களை போல் வசூலை குவித்த நெல்லை ரயில் நிலையம்... வரப்போகும் புதிய வசதிகள் என்ன தெரியுமா? title=

Tirunelveli Railway Station: கடந்த 2022 - 2023 நிதியாண்டில் தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களின் வருமானம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் முதலிடத்தில் சென்னை சென்ட்ரல் ரூ. 1085 கோடி, இரண்டாமிடத்தில் சென்னை எழும்பூர் ரூ. 523 கோடி, கோவை ரூ. 283 கோடியுடன் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.

தென் மாவட்டங்களை பொருத்தவரை மதுரை ரூ. 190.7 கோடியுடன் ஆறாவது இடத்தையும், நெல்லை ரூ. 111.7 கோடியுடன் 12ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. ரூ. 500 கோடிக்கு மேல் வருவாய் இருந்தால் என்எஸ்ஜி-1 எனவும், 100 கோடி முதல் 500 கோடி வரை வருவாய் வருவாய் இருந்தால் என்எஸ்ஜி-2 எனவும், 20 கோடி முதல் 100 கோடி வரை வருவாய்  இருந்தால் என்எஸ்ஜி-3 எனவும் ரயில் நிலையங்கள் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது வரை நெல்லை ரயில் நிலையம் ரூ. 100 கோடிக்கு உள்ளாகவே வருமானம் தந்து கொண்டிருந்ததால் என்எஸ்ஜி-3 பிரிவிலேயே இருந்தது. இந்த நிதியாண்டில் முதல் முறையாக ரூ. 111.7 கோடி வருமானம் கிடைத்துள்ளதால் என்எஸ்ஜி-2 அந்தஸ்தை உயர்த்துவதற்கு தகுதி பெற்றுள்ளது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் என்எஸ்ஜி-3 லிருந்து என்எஸ்ஜி-2 ரயில் நிலையமாக மாறும் போது பல்வேறு புதிய வசதிகள்  ரயில்வே செயல்படுத்தப்படும்.  

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அதிர்ச்சி... உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - இனி ரயில்களில் சலுகை கிடையாது?

புதிய வசதிகள் என்னென்ன?

1. பயணிகள் ஓய்வு அறை 125 சதுர மீட்டரில் இருந்து 250 சதுர மீட்டர்க்கு விரிவாக்கம் செய்யப்படும்.

2. நடைமேடை இருக்கைகள் 125இல் இருந்து 150 ஆக உயர்த்தப்படும்.

3. நடைமேடை மேற்கூரை நீளம் 400 சதுர மீட்டரில் இருந்து 500 சதுர மீட்டர்க்கு நீளம் கூட்டப்படும்.

4. சிறுநீர் கழிவறை 10இல் இருந்து 12 ஆக உயர்த்தப்படும்.

5. கழிவறை 10இல் இருந்து 12 ஆக உயர்த்தப்படும்.

6. குளிர் தண்ணீர் இயந்திரம் ஒரு நடைமேடைக்கு இரண்டு வீதம் வைக்கப்படும்.

7. இணைய கணிணிமையம்.

8. உயர்தர உணவு பிளாசா.

9. பிரிபெய்டு டாக்சி.

10. இரண்டாவது நுழைவு வாயில்.

11. குளிர்சாதன விஐபி உயர்தர ஓய்வு அறை, இவ்வாறு அதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

எனவே, நெல்லை ரயில் நிலையத்தின் தரத்தை என்எஸ்ஜி-3 இல் இருந்து என்எஸ்ஜி-2 பிரிவிற்கு மாற்ற வேண்டும் என ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்க | உங்கள் ரயில் டிக்கெட்டில் வேறொருவரை பயணம் செய்ய வைப்பது எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News