7th Pay Commission: 18 மாத அரியர் குறித்த பெரிய அப்டேட், கிடைக்கவுள்ளதா நிலுவைத் தொகை?
7th Pay Commission: சுமார் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உட்பட 62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது.
7வது சம்பள கமிஷன், 18 மாத நிலுவைத் தொகை புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய செய்தி ஒன்று உள்ளது. நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருந்த ஒரு பெரிய விஷயம் குறித்து ஒரு புதுப்பிப்பு வந்துள்ளது. 18 மாத நிலுவைத் தொகை குறித்த பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது. இது ஊழியர்களுக்கு நிவாரணம் தரக்கூடியதாக இருக்கும். மீண்டும் 18 மாதங்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் குறித்த விவாதம் தொடங்கியது. பணியாளர்கள் தரப்பின் தேசிய கவுன்சில் மீண்டும் அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.
சுமார் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உட்பட 62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. நிலுவையில் உள்ள ரூ. 34.402.32 கோடியை வழங்கக்கோரி ஊழியர்கள் சார்பில் மீண்டும் போராட்டம் தொடங்கப்படும் என தெரிகிறது. தேசிய கூட்டு நடவடிக்கை கவுன்சிலின் மூத்த உறுப்பினரும், அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தின் (AIDEF) செயலாளருமான ஸ்ரீ குமார் இந்த சிறப்பு தகவலைத் தெரிவித்தார். பழைய ஓய்வூதியத்தை மீண்டும் வழங்கக் கோரியும், 18 மாதங்களுக்கான டிஏ-டிஆர் வழங்கக் கோரியும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார். இந்த நிலையில், 18 மாதங்களுக்கு முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குமாறு அமைச்சரவை செயலாளருக்கு ஊழியர்கள் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிக்கை
இது மட்டுமின்றி, நிதியமைச்சகத்துக்கும் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன், என்பிஎஸ், அதாவது தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் ஊழியர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. இதற்கிடையில், நிலுவைத் தொகை விவகாரம் மீண்டும் ஒருமுறை எழுப்பப்பட்டுள்ளது. 34,000 கோடி ரூபாய்க்கு மேல் தொகை அளவு கொண்ட அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண நிலுவைத் தொகையை வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ‘மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை FRBM சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க முடியாத நிலை உள்ளது.’ என்று கூறினார்.
மேலும் படிக்க | 8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: ஊதியத்தில் பம்பர் 44% ஏற்றம்
நிலுவைத் தொகை குறித்த அப்டேட்
ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை, கொரோனா காலத்தில் 18 மாதங்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் 3 தவணைகள் நிறுத்தப்பட்டன. கொரோனா காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. அப்போது அமைச்சரவை செயலாளருடனான சந்திப்பில் ஜேசிஎம் செயலாளர் சிவகோபால் மிஸ்ரா இந்த விவகாரத்தை எழுப்பினார்.
ஊழியர்களுக்கு விரைவில் நிலுவைத்தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும், இந்த கோரிக்கையை அரசு முற்றாக நிராகரித்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, நிலுவைத் தொகைக்காக பல ஊழியர் அமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்ததை அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால், இது தொடர்பாக, நிலுவைத் தொகை வழங்கப்படும் என, எந்த வகையிலும் தெளிவாக கூறப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில், டிஏ நிலுவைத் தொகையை வழங்குவது சாத்தியம் இல்லை என, மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ரூ. 34,000 கோடிக்கு மேல் உள்ள நிலுவைத் தொகையை வழங்காது என கூறப்படுகின்றது.
தொழிற்சங்க கோரிக்கைகள்
ஆனால், இதுபோன்ற வழக்குகளில் ஊழியர்களுக்கு 6 சதவீத வட்டியுடன் ஊதியம் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக ஊழியர் அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதனுடன், AIDEF இன் பொதுச் செயலாளர் திரு.குமார், அரசாங்கம் இது குறித்து பரிசீலிக்க மறுப்பதாக குற்றம் சாட்டினார். ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் 2020 முதல் 18 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. 11% அகவிலைப்படியை நிறுத்தியதால், மத்திய அரசுக்கு ரூ. 40,000 கோடிக்கு மேலான தொகை மிச்சமாகியுள்ளது. நிலுவைத் தொகையை வழங்குவதற்காக பல்வேறு தெரிவுகள் அரசாங்கத்திற்கு பிரதிநிதிகளால் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இந்த தெரிவுகள் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் ஊழியர்கள் அமைப்பு கூறுகிறது.
அமைச்சரவை செயலாளருக்கு கடிதம்
48 ஆவது ஜேசிஎம் கூட்டத்தில் அமைச்சரவை செயலாளருக்கும் கடிதம் எழுதப்பட்டது. இதில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, பொருளாதார நெருக்கடி காரணமாக, ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை தற்காலிகமாக நிறுத்தலாம் என செயலர் கூறியிருந்தார். நிலைமை சீரானதும், மீண்டும் ஊழியர்களுக்கு இதை வழங்க வேண்டும் என்றும் இது ஊழியர்களின் உரிமை என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஊழியர்களின் இந்த கொடுப்பனவுகள் சட்டத்தின்படி அளிக்கப்பட வேண்டும்.
தற்போது மீண்டும் 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து ஊழியர்கள் அமைப்பால் புதிய கொள்கை மூலம் கோரிக்கைகள் வைக்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம், 18 மாத அரியர் நிலுவைத் தொகை என இந்த விஷயங்களில் ஊழியர் சங்கங்கள் அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க தயாரகி வருகின்றன்.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ