அகவிலைப்படி உயர்வு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் (டிஏ) 3% உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்திய தரவுகளின் படி, ஏஐசிபிஐ 4 சதவிகிதம் அதிகரிக்கும் என நம்பப்பட்டது. ஆனால், தற்போது 3% அதிகரிப்புதான் இருக்கும் என ஒரு சாரார் கூறி வருகின்றனர். எனினும் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகுதான் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய உண்மையான விவரம் புலப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி


தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்கள் தங்களது அடிப்படை ஊதியத்தில் 42 சதவிகித அகவிலைபப்டியை பெறுகிறார்கள். ஓய்வூதியம் பெறுவோர் தங்களது அடிப்படை ஓய்வூதியத்தில் 42 சதவிகித அகவிலை நிவாரணத்தை பெறுகிறார்கள். இந்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4 சதவிகிதம் அதிகரித்தால் மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரிக்கும். அகவிலைப்படியானது, விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தை எதிர்த்து போராட மக்களுக்கு அளிக்கப்படும் கொடுப்பனவாக அளிக்கப்படுகின்றது. 


அகவிலைப்படி உயர்வு


மத்திய அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் அதிகரித்து 45 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளதாகவும், அதற்கு காரணம் இருப்பதாகவும் சமீபத்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தொழிலாளர் பணியகத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான (CPI-IW) சமீபத்திய அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. ஜூன் 2023க்கான AICPI-IW தரவு ஜூலை 31, 2023 அன்று வெளியிடப்பட்டது.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் 3% அல்லது 4%? ஏன் இந்த குழப்பம்? எப்போது அறிவிப்பு?


வருவாய்


AICPI-IW தரவுகளின்படி, அகவிலைப்படி உயர்வு 3% -ஐ விட சற்றே அதிகமாக உள்ளது என்று அகில இந்திய ரயில்வே மேன்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா தெரிவித்தார். இருப்பினும், தசம புள்ளிக்கு மேல் அகவிலைப்படியை அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலிக்கவில்லை. அதாவது அரசாங்கம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3% அதிகரிக்கலாம். நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறையானது, வருவாய் தாக்கங்களுடன் அகவிலைப்படி உயர்வுக்கான முன்மொழிவைத் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் பின்னர் இறுதி ஒப்புதலுக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முன் வைக்கப்படும்.


மக்கள் பயனடைவார்கள்


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறுகின்றனர். அகவிலைப்படி / அகவிலை நிவாரண உயர்வு அறிவிப்பால் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.


நான்கு சதவீதம் டிஏ அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?


ஏஐசிபிஐ குறியீட்டின் கடந்த 6 மாத புள்ளிவிவரங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், இம்முறையும் அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஊழியர்களின் டிஏ மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஆர் தற்போதுள்ள 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக அதிகரிக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதன் காரணமாக அவர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெருமளவில் உயர வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த முறையும் டிஏ மற்றும் டிஆர் நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டால், அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாக இருக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: 46% டிஏ ஹைக்.. ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் சம்பளம்.. கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ