இலவச ரேஷன் விதிகள்: அரசின் இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் நீங்களும் ரேஷன் பொருட்களை பெறும் நபராக இருந்தால், உங்களுக்கு ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. அரசிடம் இருந்து ரேஷன் பெறும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்களை வாங்குவதில் நீங்கள் தாமதித்தால் உங்களுக்கு நஷ்டம் ஏற்படலாம். தற்போதுள்ள விதிகளின் படி, ​​கார்டுதாரர் நேரம் கிடைக்கும் போதெல்லாம், நியாய விலை கடைக்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்குவது வழக்கம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வது உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரேஷன் விநியோக முறை மற்றும் ரேஷன் கடைகள் திறக்கும் நேரத்தை அரசு மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்த விவரங்களை ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் தெரிந்துவைத்திருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.


உத்தர பிரதேசத்தில் 15 கோடி ரேஷன் கார்டு பயனர்கள் உள்ளனர்


அரசு உத்தரவின் பேரில், 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் ரேஷன் பொருட்களின் வினியோகம் நடந்து வருகிறது. அதாவது அரிசி, கோதுமையுடன் தினையும் முதலில் வருபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். ஆனால் கார்டுதாரர் வர தாமதம் ஏற்பட்டால், அரிசி மற்றும் கோதுமை மட்டுமே அட்டைதாரருக்கு வழங்கப்படும். உத்தரபிரதேசத்தில் சுமார் 15 கோடி ரேஷன் கார்டு பயனாளர்கள் உள்ளனர். புதிய விதி அவர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பிஎச்எச் மற்றும் அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசு மானிய விலையிலும் இலவசமாகவும் ரேஷன் பொருட்களை வழங்குகிறது. 


மேலும் படிக்க | இலவச ரேஷன் விதிகளை மாற்றியது அரசு, இனி கோதுமை, அரிசி...


ஏப்ரல் 13 முதல் 24 வரை ரேஷன் விநியோகம் செய்யப்படும்


தற்போது அரசு சார்பில் கார்டுதாரர்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஏப்ரலில் ரேஷன் விநியோகம் தொடங்கியுள்ளது. அரசின் புதிய ரேஷன் விநியோகத்தின் கீழ் ஏப்ரல் 13 ஆம் தேதி இது தொடங்கியது. ஏப்ரல் 24 வரை ரேஷன் விநியோகம் செய்யப்படும். 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் ரேஷன் வினியோகம் இலவசமாக வழங்கப்படும். இதில் அந்த்யோதயா அட்டைதாரர்களுக்கு 14 கிலோ கோதுமை, 20 கிலோ அரிசி, ஒரு கிலோ கம்பு ஆகியவை வழங்கப்படும். பிஎச்எச் கார்டுதாரர்களுக்கு 2 கிலோ கோதுமை, 2 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ கம்பு வழங்கப்படும். கம்பின் இருப்பு முடிந்தவுடன் அதற்கு பதிலாக அரிசியின் அளவு அதிகரிக்கப்படும்.


ரேஷன் விநியோக நேரம்


ரேஷன் விநியோக நேரத்திலும் அரசு மாற்றம் செய்துள்ளது. இனி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்க வேண்டும். இதன் மூலம் அனைவரும் வசதியாக ரேஷன் பொருட்களை வாங்க முடியும். இந்த மாற்றத்திற்குப் பிறகு, ஏழைப் பிரிவில் வரும் தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இது தவிர, முதலில் வந்து வாங்குவோருக்கு தினை கிடைக்கும் என்ற விதிமுறையும் அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு மாதமும் 13 முதல் 24ம் தேதி வரை ரேஷன் விநியோகம் செய்யப்படும்.


மேலும் படிக்க | ரேஷன் விதிகளில் அரசு செய்த மிக்கப்பெரிய மாற்றம், இனி இரட்டிப்பு பலன் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ