ரேஷன் கார்டு அப்டேட்: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. தற்போது நாடு முழுவதும் ரேஷன் கார்டுதாரர்கள் மத்திய அரசிடமிருந்து பல வசதிகளைப் பெற்று வருகின்றனர். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அவ்வப்போது மத்திய, மாநில அரசுகள் பெரும் வசதிகளை செய்து தருவதால், இதன் பலனை நாடு முழுவதும் உள்ள கார்டுதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது, அரசால் ஒரு பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இரட்டிப்பு பலன் (Free Ration Scheme) கிடைக்கும். இதற்கான தகவல் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காணபோம்.
கோடிக்கணக்கான அட்டைதாரர்களுக்கு பயன்
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் இந்தத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அரசின் இலவச ரேஷன் திட்டத்தால், ஏழை குடும்பங்களின் நிதிச்சுமை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு இலவச ரேஷன் வழங்குவது மிகவும் பாராட்டுக்குரியது மற்றும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட், அரசின் இந்த உத்தரவால் டபுள் லாபம்
அரிசியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
இதனிடையே 2024-ம் ஆண்டுக்குள் சத்து நிறைந்த தரமான அரிசியை அரசு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் விநியோகிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் தற்போதைய நோக்கமாகும். இந்த அரிசி தற்போது 269 மாவட்டங்களில் PDS மூலம் விநியோகிக்கப்படுகிறது. முன்பு வழங்கப்பட்ட அரிசியை விட இந்த அரிசியின் தரம் மிகவும் சிறப்பாக இருப்பதாக ரேஷன் பெற்று வரும் மக்கள் கூறி வருகின்றனர்.
இந்த அரிசியில் சத்துக்கள் நிறைந்திருக்கும்
அது மட்டுமில்லமால் இந்த அரிசியில் சத்துக்கள் நிறைந்துள்ளதாக அரசிடம் இருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் தரம் முன்பை விட மிகவும் சிறப்பாக உள்ளது. எனவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த தரமான அரிசி அரசால் இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுமையான ரேஷன் கிடைக்கும்
இதனுடன் பொது மக்கள் மத்திய அரசின் முழுமையான ரேஷன் பெறுவதற்கான சிறப்பு வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில் மின்சாரத் தராசுகளுடன் மின்னணு பாயின்ட் ஆஃப் சேல் (EPOS) சாதனங்களை இணைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது, இதனால் பயனாளிகள் முழுமையாக ரேஷன் பெற முடியும்.
மேலும் படிக்க | உங்கள் வங்கி கணக்கில் ரூ.147 டெபிட் செய்யப்பட்டதா? உடனே செக் பண்ணுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ