30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசிகளை பாடாய் படுத்தவுள்ளார் சனி பகவான்
Sun Transit 2022: நிகழவிருக்கும் சனியின் பெயர்ச்சியால், எந்தெந்த ராசிகளுக்கு அதிகப்படியான பாதிப்பு இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில் 9 கிரகங்களுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சனி பகவானின் வேகம் மற்ற கிரகங்களைக் காட்டிலும் மிகக் குறைவாக இருக்கும். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்கிறார்.
ஆகையால், ஒரு ராசியில் சஞ்சரித்த சனி சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மீண்டும் அதில் வருகிறார். ஜோதிட சாஸ்திரப்படி 30 வருடங்களுக்கு பிறகு சனிபகவான் மீண்டும் கும்ப ராசிக்கு வருகிறார். ஏப்ரல் 29 ஆம் தேதி, சனி 30 ஆண்டுகளுக்கு மகர ராசிக்கான தனது பயணத்தை நிறத்தவுள்ளார். சனி பகவானின் இந்த மாற்றத்தால் சில ராசிகளில் ஏழரை நாட்டு சனி, சனி தசை துவங்கும். அதேசமயம் இந்த காலத்தில் ஏழரை நாட்டு சனி, சனி தசை சில ராசிகளில் முடிவடையும். இந்த காலகட்டத்தில் சில ராசிகள் சனியின் கோவப்பார்வையின் கீழ் வரும்.
ஏழரை நாட்டு சனியில் மூன்று கட்டங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒரு நபரின் வாழ்க்கையில் வெவ்வேறு விதத்தில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதன் முதல் கட்டம் விரைய சனி என்றும், இரண்டாம் கட்டம் ஜென்ம சனி என்றும், மூன்றாம் கட்டம் பாத சனி என்றும் அழைக்கப்படுகின்து.
தற்போது நிகழப்போகும் சனியின் பெயர்ச்சியால், எந்தெந்த ராசிகளுக்கு அதிகப்படியான பாதிப்பு இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
சனியின் தாக்கம் இந்த 2 ராசிகளில் இருக்கும்
சனி பகவானின் சஞ்சாரத்தால், மீன ராசிக்கு ஏழரை நாட்டு சனி தொடங்குகிறது. கடக ராசிக்கு அஷ்டம சனியின் தாக்கம் இருக்கும். மேலும் விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனியின் பலன்கள் உண்டாகும்.
மேலும் படிக்க | Astrology: ஜாதகத்தில் அமையும் பஞ்ச மகா புருஷ யோகம் வெற்றிகளை அள்ளித்தருகிறது..!!
கும்ப ராசிக்கு சனி பகவான் செல்வதால், தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியிலிருந்து விடுபடுவார்கள். அதனுடன் மிதுனம் மற்றும் துலாம் ராசியினரும் சனி பகவானின் அசுப பலன்களிலிருந்து நிவாரணம் பெறுவார்கள், பல நன்மைகளையும் அடைவார்கள்.
ஜோதிடர்களின் கூற்றுப்படி, சனி பகவான் துலாம் ராசியில் உச்சத்தில் இருக்கிறார். மேஷ ராசியில் நீச்சமாக இருக்கிறார். மேலும், மகரம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதியாக சனி கருதப்படுகிறார். சனியின் மகாதசை 19 ஆண்டுகள் நீடிக்கும். ஜாதகத்தில் சனி சுப மற்றும் பலமான நிலையில் இருந்தால், அந்த நபருக்கு உயர் பதவி, மரியாதை மற்றும் பண வரவு உட்பட பல வித நன்மைகள் ஏற்படும்.
இவர்களுக்கு ஏழரை நாட்டு சனி துவங்குகிறது
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி பகவான் 2 வருடங்களுக்கும் மேலாக மகர ராசியில் இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் சனியின் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது. ஏப்ரல் 29-ம் தேதி சனிபகவான் கும்ப ராசியில் பிரவேசித்தவுடன் மீன ராசியில் ஏழரை நாட்டு சனி தொடங்கும்.
அதே வேளையில் தனுசு ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுபெறுவார்கள். இது தவிர மகர ராசியில் ஏழரை நாட்டு சனியின் கடைசிக் கட்டமும், கும்ப ராசியில் ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டமும் தொடங்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றிற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ராகு கேது பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களை பாடாய் படுத்தும்: அதிக கவனம் தேவை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR