Bizarre Food Habit: இறந்த கணவரின் சாம்பலை தினமும் சாப்பிடும் விநோதமான மனைவி
இறந்து போன தன் கணவரின் உடலை எரித்த சாம்பலை சாப்பிடுவதாக ஒரு பெண் தெரிவித்த விசித்திர சம்பவம் இது...
காதலுக்கு கண் இல்லை என்று சொல்வதை உண்மையாக்கும் சம்பவங்களை அடிக்கடி பார்த்து வருகிறோம். ஆனால் ஒரு மனைவி இறந்த கணவனை நினைத்து செய்யும் செயல் இதுவரை யாரும் கேள்விப்படாத ஒன்றாக இருக்கிறது.
இதை காதல் என்று சொல்வதா? இல்லை என்ன பெயரிடுவது என்றே விஷயத்தை கேள்விப்படும் அனைவரும் அதிர்ந்து போகின்றனர். 26 வயதான பெண் Caise, இறந்து போன தன் கணவரின் உடலை எரித்த சாம்பலை சாப்பிடுவதாக தெரிவித்துள்ளார். இந்த விநோத பெண்மணி இங்கிலாந்தை சேர்ந்தவர். அவருடைய கணவர் Sean ஆஸ்துமா பிரச்சனையால் உயிரிழந்தார்.
2009 ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்தனர். ஆனால், கணவர் இறந்த பிறகு, தான் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் கணவரின் சாம்பலை எடுத்துச் செல்லத் தொடங்கினார்.
Also Read | எலும்புகளை பலவீனமாக்கும் ஆபத்தான ‘5’ பழக்கங்கள்
"கணவரின் சாம்பலையே வாழ்க்கைத் துணையாக பாவித்து, மளிகைக் கடை, ஷாப்பிங், திரைப்படங்கள், ஹோட்டல் என எங்கு சென்றாலும் அழைத்துச் செல்வதாக அவரே ஒப்புக் கொள்கிறார்.
சிலர் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், கேசி, தனது கணவரின் சாம்பலை சாப்பிடுகிறார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
"என் கணவர் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் என்னுடன் இருக்கிறார் என்பதை உணர்வதற்காக அவரை (சாம்பலை) என் விரல்களால் எடுத்து சுவைக்கிறேன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இவ்வாறு செய்கிறேன். என்னால் இந்தப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை, நான் என் கணவரை சாப்பிடுகிறேன்" என்று கேசி கூறுகிறார்.
சாதாரண உணவைப் போல மனிதச் சாம்பலை உண்ண முடியாது, எனவே கேசி, கணவரின் சாம்பலை விரல்களில் கொஞ்சமாக எடுத்து, அதை வாயில் வைத்து சுவைக்கிறார்.
Also Read | இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு பயணித்த கொடிய நச்சுப் பாம்பு
இருப்பினும், சாம்பலின் சுவை தனக்கு பிடிக்கவில்லை என்றும் அது அழுகிய முட்டை போன்று துர்நாற்றம் வீசுவதாகவும் சொல்லும் கேசி, ஆனால் அது தனக்கு பழகிவிட்டதாகவும் இப்போது தான் அந்த சுவையை விரும்பத் தொடங்கிவிட்டதாகவும் கூறுகிறார்.
சாம்பலின் சுவை பிடிக்கவில்லை என்றாலும், அதை சாப்பிடுவது அவருக்கு மகிழ்ச்சியையும் அட்ரினலின் (adrenaline) உணர்வையும் தருகிறது என்று அவர் கூறுகிறார். "நான் சாம்பல் இருக்கும் டப்பாவை திறக்கும்போது, எனக்கு ஒரு மகிழ்ச்சியான உணர்வு கிடைக்கிறது, அது எனக்கு மிகவும் தேவையாக இருக்கிறது, போதும் என்று தோன்றும் வரை சாம்பலை உண்கிறேன்" என்று கேசி கூறினார்.
மக்களின் விசித்திரமான போதை பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் கேசி பங்கேற்று, இறந்த கணவரின் சாம்பலை சாப்பிடும் தனது விசித்திரமான பழக்கத்தைப் பற்றி வெளிப்படையாக பொதுவெளியில் பகிர்ந்துக் கொண்டார்.
Also Read | கொலைக்கு புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பாம்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR