எலும்புகளை பலவீனமாக்கும் ஆபத்தான ‘5’ பழக்கங்கள்

Bone Weakening Habits: எலும்புகளை பலவீனமாக்கும் ஆபத்தான ஐந்து பழக்கங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 20, 2021, 08:51 AM IST
  • எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் முக்கியத்துவம்.
  • மாறிவரும் வாழ்க்கை முறையில் புகை பிடிப்பது ஒரு நாகரீகமாகிவிட்டது.
  • அதிக குளிர்பானத்தை குடிப்பது உங்கள் இரத்தத்தில் கால்சியத்தின் அளவைக் குறைக்கிறது
எலும்புகளை பலவீனமாக்கும் ஆபத்தான ‘5’ பழக்கங்கள் title=

Bone Weakening Habits: நீங்கள் நீண் காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உங்கள் எலும்புகள் வலுவாக இருப்பது மிகவும் முக்கியம். வயது அதிகரிக்கும் போது, ​​எலும்புகளில் பலவீனம் ஏற்படுவது இயற்கையானது என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர், ஆனால் இன்றைய காலகட்டத்தில், இளைஞர்களுக்கும் எலும்பு பலவீனம் அடைவது சாதாரண விஷயமாகிவிட்டது. எலும்புகள் பலவீனமாக இருக்கும்போது, ​​உங்கள் அன்றாட பணிகளை பாதிக்கும் வகையிலான பல பிரச்சனைகள் ஏற்படும். எலும்புகள் வலுவிழக்க பல காரணங்கள் இருக்கலாம். 

உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறை தவிர, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான சில கெட்ட பழக்கங்களும் எலும்புகள் வலுவிழக்க காரணமாக இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தெரிந்தோ தெரியாமலோ, எலும்புகளை சேதப்படுத்தும் சில தவறுகளை செய்கிறோம். அவற்றைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!

எலும்புகளை பலவீனப்படுத்தும் பழக்கங்கள்

1. அதிக அளவில் மது அருந்துதல்

அதிக மது அல்லது ஆல்கஹால் அருந்துவது உங்கள் எலும்புகளில் பலவீனத்தை ஏற்படுத்துகிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர், ஏனெனில் அதிக மது அருந்துவதால், உடலின் கால்சியத்தை கிரகித்துக் கொள்ளும் திறன் குறைகிறது.

2. அதிக காபி குடிப்பது

காபியை அதிகமாக உட்கொள்வதால் எலும்புகள் பலவீனமடையும். காபியில் காஃபின் அளவு அதிகமாக இருப்பதால், இது எலும்புகளில் இருக்கும் கால்சியத்தின் அளவைக் குறைக்கிறது. எனவே, காபியை அளவாக உட்கொள்ள வேண்டும்.

ALSO READ | Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!!

3. அதிகப்படியான உப்பு 

அதிக உப்பை உட்கொள்வதால் எலும்புகள் பலவீனமடையும், ஏனென்றால் அதிக உப்பு சாப்பிடுவதால், கால்சியம் உடலில் இருந்து சிறுநீர் வழியாக வெளியேறும். இதன் காரணமாக எலும்புகள் படிப்படியாக பலவீனமடையத் தொடங்குகின்றன. எனவே நாம் அதிகப்படியான உப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

4. அதிக அளவில் குளிர்பானங்களை அருந்துதல்

குளிர்பானங்களை உட்கொள்வதால் எலும்புகள் பலவீனமடையும், ஏனென்றால் குளிர்பானங்களில் சோடா மிக அதிகம். அதிக குளிர்பானத்தை குடிப்பது உங்கள் இரத்தத்தில் கால்சியத்தின் அளவைக் குறைக்கிறது மற்றும் பாஸ்பேட்டின் அளவை அதிகரிக்கிறது, இதன் காரணமாக எலும்புகளுக்கு போதுமான கால்சியம் கிடைக்காது. இது எலும்புகளை பலவீனப்படுத்துகிறது.

5. புகை பிடித்தல்

மாறிவரும் வாழ்க்கை முறையில் புகை பிடிப்பது ஒரு நாகரீகமாகிவிட்டது. ஆனால் இந்த பழக்கம் உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்தலாம். புகைபிடித்தல் எலும்பு செல்களை சேதப்படுத்துகிறது, இதன் காரணமாக எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன.

ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!

எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் முக்கியத்துவம்

எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்ப தால், உடல் கட்டமைப்பை பராமரிப்பதோடு, உடலில் பல முக்கிய உறுப்புகளை பாதுகாக்கும் எலும்புகளும் தசைகளும் வலுவாக இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.எனவே எலும்புகளை பராமரிப்பது மிகவும் முக்கியம். 30 வயதிற்குப் பிறகு, பெரும்பாலான மக்களின் எலும்பு மெலிதல் நோயான ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு எலும்புகள் பலவீனமடைகின்றன. இதில் எலும்புகள் பலவீனமடைந்து எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அதனால்தான் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

பொறுப்பு துறப்பு- செய்திகளில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது. இது எந்த வகையிலும் மருத்துவக் ஆலோசனக்கு மாற்றாகாது. மேலும் தகவலுக்கு, நீங்கள் எப்போதும் ஒரு நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News