புதுடெல்லி: இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோதியின் 71வது பிறந்தநாள் இன்று. உலகத் தலைவர்கள் உட்பட கோடிக்கணக்கானவர்கள், பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவிட் சகாப்தத்தில் பிரதமரின் பிறந்தநாளை எப்படி கொண்டாடுவது என்று யோசித்து, மக்களுக்கு நன்மை தரும் வகையில் வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்தனர் பாரதிய ஜனதா கட்சித் தொண்டரக்ள். 


பிரதமரின் பிறந்தநாளை வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.இதற்காக, இன்று, அதிகபட்சமாக கோவிட் -19 தடுப்பூசியை போடுவதற்கான முயற்சிகளை கட்சி எடுத்துள்ளது.


பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள லால்காதி சவுராஹாவில் 71 அடி நீளமுள்ள கேக்கை பாரதிய ஜனதா கட்சியினர் வெட்டினர். தடுப்பூசி போடும் ஊசி வடிவில் இருந்த கேக் பார்க்கவே பிரம்மாண்டமாக இருந்தது.



கோவிட் -19 தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுக்கும் பாரதப் பிரதமருக்கு கட்சித் தொண்டர்கள் நன்றி தெரிவித்தனர். "தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுக்கும் பிரதமருக்கு நன்றி" என்ற பொருள் படும் . “Thanks to Modiji for Namo Tikka” ஆங்கில வாசகம் கேக்கில் எழுதப்பட்டுள்ளது.


கட்சித் தொண்டர்கள் அனைவரும்  மற்றும் முகமூடிகளை அணிந்து, வெண்ணிற டீஷர்ட் மற்றும் முகக்கவசங்களை அணிந்து சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி பிரதமரின் பிறந்தநாளை கொண்டாடினார்கள். அப்போது, பிரதமரின் பிரம்மாண்டமான புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தன. 


ஏஎன்ஐ  செய்தி முகமையிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர் ஒருவர், மகிழ்ச்சியை தெரிவித்தார்.  “பிரதமரின் பிறந்தநாளை நாங்கள் மக்களுக்கு சேவை செய்யும் நாளாக பார்க்கிறோம். இன்று மொத்தம் 71 பேர் ரத்த தானம் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.


ALSO READ | வெறுத்தாலும், நேசித்தாலும் தவிர்க்க முடியா ஆளுமை நரேந்திர மோதி; பிறந்தநாள் வாழ்த்து


பிரதமரின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு கேக் கூட 71 அடி நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது, பிரதமர் நீண்ட நாட்கள் வாழ்ந்து, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்" என்று பாஜக தொண்டர் கூறினார்.


பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்வது போன்ற பிற நலத்திட்டங்களையும் திட்டமிட்டுள்ளது.  மோடியின் படங்களுடன் 140 மில்லியன் ரேஷன் பைகளை விநியோகிக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. சுமார் 50 மில்லியன் பாஜக தொண்டர்கள், பொது சேவைக்கான தங்கள் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் விதமாக மோடி அஞ்சல் அட்டைகளை அனுப்புவார்கள்.


இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சி, பிரதமரின் பிறந்தநாளை வரலாற்று சிறப்பு மிக்கதாக மாற்றுவதற்காக, இன்று நாட்டில் அதிக அளவிலான மக்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.


இந்தியாவில் நேற்று வரை (செப்டம்பர் 16) போடப்பட்ட கோவிட் -19 ஒட்டுமொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 77 கோடியை தாண்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Also Read | தமிழகத்தில் வரும் 19ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR