புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் பிறந்தநாள் இன்று. உலகம் முழுவதும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன. வெறுத்தாலும், நேசித்தாலும் தவிர்க்க முடியா ஆளுமை நரேந்திர மோதி என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். இன்று 71வது பிறந்தநாள் காணும் பிரதமர் நரேந்திர மோதிக்கு வாழ்த்துக்கள்.
அவரை ஆதரிப்பவராக இருந்தாலும் சரி, எதிர்ப்பவராக இருந்தாலும் யாருமே புறக்கணிக்க முடியாத ஆளுமை நரேந்திர தாமோதரதாஸ் மோதி (Narendra Damodardas Modi). இந்தியாவின் 14வது மற்றும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று செப்டம்பர் 17.
இன்று பிறந்த நாள் காணும் பிரதமர் மோடிக்கு சர்வதேசங்களில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பிரதமருக்கு வாழ்த்துக்களை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
"His exceptional vision, exemplary leadership and dedicated service have led to all-round growth of the nation. May he be blessed with a long, healthy and happy life ahead," tweets Vice President Venkaiah Naidu wishing PM Narendra Modi on his birthday pic.twitter.com/h7ddUl4WRM
— ANI (@ANI) September 17, 2021
நரேந்திர மோதியின் மாறுபட்ட தொலைநோக்கு கண்ணோட்டம், முன்மாதிரியான தலைமை பண்பு, அர்ப்பணிப்புடன் கூடிய சேவை ஆகியவை நாட்டை பல்வேறு வழிகளிலும் முன்னேற்றியுள்ளது. நீண்ட, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையட்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குஜராத் முதலமைச்சர் என மாநிலத்திற்காக அவர் எடுத்த முடிவுகள் பேசபபட்டாலும், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் எடுத்த சில முக்கிய முடிவுகளை பார்ப்போம்.
ALSO READ | மருத்துவ படிப்பை தவறவிட்டேன்; ஆனால் வாழ்க்கை சிறப்பாகவே இருக்கிறது
ஸ்வச் பாரத் அபியான் (Swachh Bharat Abhiyan) எனப்படும் தூய்மை இந்தியா திட்டம்
இந்திய அரசின் மிக முக்கியமான தூய்மை பிரச்சாரங்களில் ஒன்றாகும். திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிப்பதற்கும், திடக்கழிவு மேலாண்மை முறையை மேம்படுத்துவதற்கும் 2014 இல் தொடங்கப்பட்ட பிரச்சாரம் தூய்மை இந்தியா பிரசாரம். அதிகாரப்பூர்வமாக காந்தி ஜெயந்தி, அக்டோபர் 2, 2014 அன்று டெல்லியில் உள்ள காந்தி சமாதியில் தொடங்கப்பட்டது. தனிப்பட்ட மக்களுக்கு உந்துதலை ஏற்படுத்தும் இந்த பிரசாரம், கிராமப்புறங்களில் கழிப்பறைகள் கட்டுவது மற்றும் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுப்பதில் முக்கிய பங்காற்றிவருகிறது.
இந்தியாவின் ராணுவ வலிமைக்கு உதாரணம் பாலகோட் விமானத் தாக்குதல்
2019ம் ஆண்டு பிப்ரவரி 26ம் நாள் அதிகாலையில், பாலகோட் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதப் பயிற்சி முகாமிற்கு எதிராக இயக்கப்பட்ட ஒரு பெரிய "ராணுவமற்ற முன்-நடவடிக்கை" இது. "அதிக எண்ணிக்கையிலான" பயங்கரவாதிகளின் மரணத்திற்கு காரணமாக அமைந்த இந்த தாக்குதல், ஜம்மு -காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடைபெற்றது.
READ ALSO | மருத்துவ படிப்பை தவறவிட்டேன்; ஆனால் வாழ்க்கை சிறப்பாகவே இருக்கிறது
பிரிவு 370 ரத்து
2019, ஆகஸ்ட் 5ம் தேதியன்று 370 மற்றும் 35 (A) சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டன. இவை, ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் அதன் குடியிருப்பு விதிகளை வரையறுக்கும் சட்டப்பிரிவுகள் ஆகும். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் ஜம்மு -காஷ்மீருக்கு வழங்கப்பட்ட தற்காலிக சிறப்பு அந்தஸ்து அல்லது தன்னாட்சி உரிமை விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஜம்மு -காஷ்மீரில் சட்டங்களை திருத்துதல்
மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜம்மு -காஷ்மீருக்கு வெளியே உள்ள மக்கள் யூனியன் பிரதேசத்தில் நிலம் வாங்கலாம் என்பதற்காக பல சட்டங்களை திருத்தியது. இது குறித்த அரசிதழ் அறிவிப்பில் (gazette notification), யூனியன் பிரதேசத்தில் நிலத்தை அகற்றுவது தொடர்பான ஜம்மு -காஷ்மீர் மேம்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 17 -ல் இருந்து "மாநிலத்தின் நிரந்தர குடியிருப்பாளர்" என்ற சொற்றொடரை மத்திய அரசு நீக்கியது.
Also Read | நீட் பயத்தால் மற்றுமொரு தற்கொலையா? உண்மை என்ன?
சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services tax) அறிமுகம்
கலால் வரி, சேவை வரி, VAT மற்றும் 13 செஸ் போன்ற 17 மறைமுக வரிகளை இணைத்து நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி(Goods and Services tax) 2017ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.
முத்தலாக்
உடனடி முத்தலாக் தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டத்தை நிறைவேற்ற NDA அரசாங்கம் பல தடைகளை எதிர்கொண்டது, ஆனால் இறுதியாக 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் நாளன்று, முத்தலாக் சட்டம், அமலுக்கு வந்தது. புதிய சட்டத்தின் கீழ், முஸ்லீம் ஆண்கள், தலாக் என்ற சொல்லை தொடர்ந்து மூன்று முறை சொல்லி, உடனடியாக விவாகரத்து வழங்க முடியாது, அப்படிச் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இது மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இப்போது உடனடியாக விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
டிஜிட்டல் இந்தியா
இந்தியாவின் தொலைநோக்கு கண்ணோட்டம் மற்றும் முன்முயற்சிகளின் படி, டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமுதாயம் மற்றும் அறிவுப் பொருளாதாரமாக நாட்டை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. அரசாங்க சேவைகள் குடிமக்களுக்கு மின்னணு முறையில் கிடைப்பதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் அடிநாதம். "இந்த தசாப்தம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறன்களையும் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் அதன் பங்கையும் மேம்படுத்தப் போகிறது. அதனால் டிஜிட்டல் இந்தியா என்ற முன்னோக்கு திட்டத்தை செயல்படுத்தியது பிரதமர் மோதியின் வெற்றிகளில் ஒன்று என்று கூறப்படுகிறது.
Also Read | நீட் மசோதா சட்டமாகுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR