திடீர் என வானில் தோன்றிய கருப்பு வளையம்; வேற்று கிரக வாசிகளா?...
பாகிஸ்தானின் லாகூரில் கருப்பு வளையம் வானத்தில் பறப்பதை கண்ட மக்கள் அட்சத்தில் ஆழ்த்தியுள்ளது!!
பாகிஸ்தானின் லாகூரில் கருப்பு வளையம் வானத்தில் பறப்பதை கண்ட மக்கள் அட்சத்தில் ஆழ்த்தியுள்ளது!!
வானில் கருப்பு வளையம் ஒன்று பாகிஸ்தான் நாட்டின் லாகூர் பகுதியில் தோன்றியதால் பலரும் வேற்று கிரக வாசிகளாக இருக்குமோ? என்று சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் பாகிஸ்தானின் லாகூர் நகர வான்பகுதியில் திடீர் என தோன்றிய கருப்பு வளையம் என்ற வீடியோ இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. வேற்று கிரக வாசிகளின் வருகை, பறக்கும் தட்டு என்று பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், லாகூரில் தோன்றிய வான் வளையங்கள் புதியதல்ல என்றும் செய்திகள் கூறுகின்றன. 2015 ஆம் ஆண்டு கஸஜஸ்தான் நாட்டில் இதேபோல கருவளையம் வானில் தோன்றியதாக செய்திகள் வெளியாகின. 15 நிமிடங்கள் நீடித்து அது மறைந்ததாக கூறப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டும் இங்கிலாந்தில் இதேபோன்ற வீடியோ பரவியது. 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மற்றும் 2012 ஆம் ஆண்டில் சிகாகோ ஆகிய இடங்களிலும் இதுபோன்ற வளையம் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், இதற்கான முறையான அறிவியல் காரணங்கள் பற்றிய தகவல்கள் இல்லை.