Thailand: பாரம்பரிய இசையை கேட்டு பசியாறும் பசித்த குரங்குகள்
பிரிட்டிஷ் இசைக்கலைஞர் பால் பார்டன் (Paul Barton) தாய்லாந்தின் லோபூரியில் உள்ள சரித்திரப் புகழ் மிக்க பகுதிகளில் பியானோ வாசிக்கிறார். இசையைக் கேட்டு பசியாறுகின்றன அங்கிருக்கும் குரங்குகள் என்ற ஆச்சரியமான சம்பவம் உலகத்தையே வியப்பில் ஆழ்த்துகிறது.
பிரிட்டிஷ் இசைக்கலைஞர் பால் பார்டன் (Paul Barton) தாய்லாந்தின் லோபூரியில் உள்ள சரித்திரப் புகழ் மிக்க பகுதிகளில் பியானோ வாசிக்கிறார். இசையைக் கேட்டு பசியாறுகின்றன அங்கிருக்கும் குரங்குகள் என்ற ஆச்சரியமான சம்பவம் உலகத்தையே வியப்பில் ஆழ்த்துகிறது.
குரங்குகளுக்கு இசை பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தாய்லாந்தில் உள்ள குரங்குகள் இசையின் ரசிகர்களாக இருக்கின்றன. இசைக்கலைஞர் பால் பார்டன்
(Paul Barton) இசைக்கும் பியானோ இசையை ரசிக்கும் மந்திகள், அவரது தலையில் ஏறுவதையும் கண்டு அனைவரும் அதிசயிக்கின்றனர்.
COVID-19 உலகம் முழுவதும் பரவி, மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் சுற்றுலா தடை மற்றும் லாக்டவுன் காரணமாக, தாய்லாந்தில் குரங்குகள் பசியால் வாடுகின்றன.
இசைக்கு அகிலமும் அசைந்தாடும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். மந்திகளின் பசியையும் மந்தமாக்கிவிடும் என்பதை இந்த கொரோனாக் காலம் நிரூபித்திருக்கிறது. குரங்குகளுக்காக இசை மழை பொழிந்து அவர்களின் பசியை மந்தப்படுத்தும் இசைக்கலைஞர் பால் பார்டன் என்ன சொல்கிறார் தெரியுமா?
"விலங்கினங்களுக்கு போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய நாம் முயற்சி செய்ய வேண்டும். அவற்றின் வயிற்றுக்கு போதுமான உணவு கிடைத்தால் அவை அமைதியாக இருக்கும், இல்லாவிட்டால் ஆக்ரோஷமாகிவிடும்" என்று சொல்கிறார் தாய்லாந்தில் நீண்ட காலமாக வசித்துவரும் 59 வயதான பார்டன்.
பார்டன் சமீபத்தில் தாய்லாந்தின் லோபூரியில் (Lopburi) நான்கு இடங்களில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். லோபூரி (Lopburi) குரங்குகள் அதிகம் வசிக்கும் இடம் என்பதால் மிகவும் பிரபலமானது. புராதன இந்துக் கோயில், ஹார்ட்வேர் கடை மற்றும் ஒரு சினிமா தியேட்டரில் இசை நிகழ்சிகளை நடத்தினார் பால் பார்டன்.
பார்டன் கிரீன்ஸ்லீவ்ஸ், பீத்தவன், மைக்கேல் நைமன் (Greensleeves, Beethoven, and Michael Nyman) என பல பிரபலமான இசை ஆல்பங்களை இசைத்தார்.”மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்” என்ற குற்றால குறவஞ்சியின் பிரபல பாடலை உண்மை என்று நிரூபிப்பதைப் போல, இசையைக் கேட்டு வானரங்கள் பால் பார்ட்னை சுற்றி ஓடியதை அனைவரும் பார்த்தனர்.
குரங்குகள் பார்ட்டனின் மேல் ஏறி விளையாடுகின்றன. அவரோ அமைதியாக பியானோ வாசித்துக் கொண்டிருக்கிரார். சில வானரங்கள் அவரது தோள்களிலும், முதுகிலும், ஏன் தலையிலும் அமர்ந்திருக்கின்றன, வேறு சில பியானோவில் அமர்ந்திருக்கிறார்கள்.
இசை எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டனவோ?
குரங்குகள் பியானோ விசைகளைத் தொட்டு விளையாடின. பியானோவின் மீது ஓடின குரங்குக் குட்டிகள். பால் பார்ட்டனின் இசைக் குறிப்புகளையும் மென்று முழுங்கத் தொடங்கின. "அங்கு பியானோ வாசித்தபோது எனக்கு புது அனுபவம் ஏற்பட்டது. நான் இசைக்கும்போது அவை உண்மையில் இசையை உண்பதைக் கண்டேன்" என்று மனம் நெகிழ்ந்து கூறுகிறார்
"இந்த அற்புதமான ரசிகர்களுக்கு இசையை வாசிப்பதற்கான திட்டத்தை நான் தொடர்வேன். அவை இடையூறு செய்வதக நினைக்க மாட்டேன்", என்று பிரிட்டனின் Yorkshire என்ற நகரத்தை சேர்ந்த பால் பார்ட்டன் கூறினார்.
பால் பார்டன் சரணாலயங்களில் யானைகளுக்காக ஷூபர்ட், பாக், சோபின், பீத்தவன் (Schubert, Bach, Chopin, Beethoven) என பிரபலமான பல இசை ஆல்பங்களை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துவருகிறார். விலங்குகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றைப் பற்றி சரியாக புரிந்துக் கொள்ளவும் பார்டன் விரும்புகிறார்.
இதையும் படியுங்கள் | டெங்கு, மலேரியா, கோவிட் மட்டுமா? பாம்புக்கடிக்கும் சவால் விடும் இந்தியர்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR