தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் அருமையான விலை மலிவான ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. இது 80 நாட்கள் வரை செல்லுபடியாகும் மலிவான ரீசார்ஜ் திட்டம் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் இந்தியாவில் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களுக்கு பெயர் பெற்றது. இருப்பினும், மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள் மட்டுமின்றி, இடைப்பட்ட மற்றும் உயர்தரத்தில் பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களையும் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளது.


ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் பிரபலமானவை.


தொலைதொடர்பு நிறுவனங்கள் ரிசார்ஜ் கட்டணங்களை அதிகரித்த பிறகு, தினசரி டேட்டா நன்மைகளுடன் வரும் Jio, Airtel மற்றும் Vi (Vodafone Idea) ஆகியவற்றின் 84 நாள் வேலிடிட்டித் திட்டங்கள் அவற்றின் விலையை ரூ.1000 ஆக உயர்த்தியுள்ளன. 


மேலும் படிக்க | BSNL பயனர்களுக்கு நல்ல செய்தி: குறைந்த விலையில் இனி அதிக நன்மைகள்


அதற்கு நேர்மாறாக, அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மலிவு விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை செயல்படுத்துகிறது. 80 நாட்கள் வரை செல்லுபடியாகும் மிகவும் மலிவு விலை ரீசார்ஜ் ப்ளான் இது. 


பிஎஸ்என்எல்லின் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.399. இந்த விலையில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயனர்களுக்கு 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் திட்டங்களை வழங்கும் நிலையில், பிஎஸ்என்எல் பயனர்களுக்கு 80 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.


வேலிடிட்டியில் மட்டுமின்றி, பலன்களிலும் பிஎஸ்என்எல் திட்டங்கள் முன்னணியில் உள்ளன.


மேலும் படிக்க | ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக நாட்கள் சலுகையை அதிகரித்த BSNL: சூப்பர் ஆஃபர் 


பிஎஸ்என்எல் ரூ.399 நன்மைகள்
நிறுவனத்தின் ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்களுக்கு 80 நாட்கள் செல்லுபடியாகும் என்பதுடன் வேறு பல நன்மைகளும் உள்ளன. இதில் வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி டேட்டா மற்றும் SMS பலன்கள் அடங்கும்.


இந்த திட்டம் பயனர்களுக்கு தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 80 நாட்களின் வேலிடிட்டியின்படி, இந்த திட்டத்தில் பயனர்கள் 80ஜிபி அணுகலைப் பெறுவார்கள். தினசரி தரவு ஒதுக்கீடு தீர்ந்த பிறகு இணைய வேகம் 80 Kbps ஆக குறைகிறது.


ஏர்டெல் மற்றும் VI (வோடாஃபோன் ஐடியா) ரூ 399 ப்ரீபெய்ட் திட்டம்
BSNL திட்டத்தை Airtel மற்றும் VI (Vodafone Idea) திட்டங்களுடன் ஒப்பிடுங்கள், இந்த நிறுவனங்கள் 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்  ரூ. 399 திட்டத்தை வைத்திருக்கின்றன.


ஏர்டெல் மற்றும் Vi இன் பேக் ரூ 399 இல் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 28 நாட்களுக்கு, இந்தத் திட்டம் உங்களுக்கு 70ஜிபி டேட்டா அணுகலை மட்டுமே வழங்கும். இருப்பினும், ஏர்டெல் மற்றும் Vi நிறுவனமும் இந்த திட்டத்தின் கீழ் 3 மாதங்கள் வரை Disney + Hotstar மொபைல் OTT சந்தாவையும் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | வீட்டை கண்காணிக்கும் ’மூன்றாவது கண்’ - ரூ.3 ஆயிரத்தில் சிசிடிவி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR