மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார். மத்திய அரசு பட்ஜெட்டில் , செலவுகளை அதிகரிக்கும் வகையில் புதிதாக ஏதேனும் அறிமுகம் செய்யப் போகின்றதா என்பது அனைவரின் அச்சமாக உள்ளது. பட்ஜெட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், சில விஷயங்கள் விலை உயர வாய்ப்புள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எரிபொருள்


இந்த பட்ஜெட்டில் எரிபொருள் விலை அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் ஏதும் இன்றி உள்ளது என்றாலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்த அச்சத்திற்குக் காரணம். மேலும், எரிபொருள் விலை உயர்வு காரணமாக, போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கும் என்பதோடு, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.


மேலும் படிக்க | Budget 2023: ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?


தங்கம்


விலை அதிகரிக்க வாய்ப்புள்ள மற்றொரு பொருள் தங்கம். கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், வரும் ஆண்டில் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருதல், மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகள் இதற்குக் காரணம். தங்கம் விலை உயர்வு நகை மற்றும் பிற தங்கப் பொருட்களை வாங்குபவர்கள் பாதிக்கப்படக் கூடும்


ஆடம்பர பொருட்கள்


வரும் பட்ஜெட்டில் எரிபொருள், தங்கம் மட்டுமின்றி ஆடம்பர பொருட்கள் மீதான வரியும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சொகுசு கார்கள், விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் டிசைனர் ஆடைகள் போன்ற பொருட்கள் அடங்கும். வருவாயை அதிகரிக்க அரசாங்கம் இந்தப் பொருட்களின் மீதான வரிகளை அதிகரிக்கலாம்.


2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படும் நிலையில் எரிபொருள், தங்கம் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் போன்ற பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனினும், குறிப்பிட்ட சில பொருட்களை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளதால், நுகர்வோருக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. நடுத்தர வர்க்கத்தினருக்கு வாழ்க்கையில் இருக்கும் அழுத்தங்கள் பற்றி தனக்கு தெரியும் என சமீபத்தில் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது. 'நானும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவள், ஆகையால், இந்த வகுப்பின் அழுத்தம் எனக்குப் புரிகிறது' என அவர் தெரிவித்திருந்தார். பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்படும். இது விலைகளை சீரானதாக வைத்திருக்க உதவும்.


மேலும் படிக்க | Budget 2023: சாமானியர்களுக்கு சூப்பர் நியூஸ், இந்த பட்ஜெட்டில் பல மாஸ் அறிவிப்புகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ