பட்ஜெட் 2023: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். தனது பட்ஜெட் உரையை அவர் தொடங்கியபோது, 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் ஏழு முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டி, அவற்றை 'சப்த்ரிஷி' என்று அழைத்தார். 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதம மந்திரி விஸ்வகர்மா கௌஷல் சம்மானின் கீழ், பாரம்பரிய கைவினைஞர்கள், முதன்முறையாக, அவர்களின் தயாரிப்புகளின் தரம், அளவு மற்றும் வாடிக்கையாளர்களுக்கான அணூகல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் உதவித் தொகுப்பைப் பெறுவார்கள். இந்த தொகுப்பில் நிதி உதவி, திறன் பயிற்சி, டிஜிட்டல், பசுமை நுட்பங்கள், பிராண்ட் ஊக்குவிப்பு, டிஜிட்டல் பணம் செலுத்துதல், சமூக பாதுகாப்பு போன்றவை அடங்கும் என்று நிதி அமைச்சர் கூறினார்.


மேலும் படிக்க | Budget 2023: சம்பள வர்க்கத்தினருக்கு ஜாக்பாட், பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்


பட்ஜெட் 2023: நிதி அமைச்சரின் 7 முன்னுரிமைகள்


1. உள்ளடக்கிய வளர்ச்சி


2. கடைசி கட்டத்தை அடையும் வரை முயற்சி


3. உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு


4. திறனை கட்டவிழ்த்து விடுதல்


5. பசுமை வளர்ச்சி


6. இளைஞர் சக்தி


7. நிதித்துறை


ஒவ்வொரு முன்னுரிமைகளையும் நிர்மலா சீதாராமன் விளக்கியபோது, வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியை உறுதி செய்யும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி அரசாங்கம் எப்போதும் செயல்பட்டு வருகிறது என்றார். 


முக்கிய அறிவிப்பாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான நிதியை 66% அதிகரித்து 79,000 கோடியாக உயர்த்தி அரிவித்தார். மூலதன முதலீட்டு செலவு 33% அதிகரித்து 10 லட்சம் கோடியாக உள்ளது என்று நிர்மலா சீதாராம் அறிவித்தார்.


மேலும் படிக்க | Budget 2023: ஏழைகளுக்கு இலவச கேஸ் தொடரும்: பிரதமர் மோடி அரசின் பிளான் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ