பட்ஜெட் 2023; ரயில்வே முக்கிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்
மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் இன்னும் ஒரு சில நாட்களில் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்திய ரயில்வேயில் ஏற்கனவே இருக்கும் விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்னும் ஒரு சில நாட்களில் ரயில்வே துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இதில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் விதிமுறைகள் புதிதாக ரயில்வே துறையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே இருக்கும் ஒருசில மிக முக்கியமான ரயில் விதிமுறைகளை பயணிகள் இந்த நேரத்தில் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் ஆகும்.
இந்திய ரயில்வே துறையை பொறுத்தவரை நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். முன்பதிவு மற்றும் முன்பதிவு அல்லாத பெட்டிகளில் பயணம், ஏசி பெட்டி பயணம் என பல்வேறு பயணங்களை ரயில்வேத்துறை வழங்கிக் கொண்டிருக்கிறது. இதில் அவரவர் வசதிக்கு ஏற்ப பயணிக்கும் நிலையில், பொதுவாக அனைத்து பயணிகளுக்குமான விதிமுறைகள் சில உள்ளன. அவற்றை ரயில்வேயில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட் விவரங்களை உடனடியாக பெற இதை செய்யுங்கள்
இரவு நேரத்தில் பயணிக்கும் பயணிகள் இந்த விதிமுறைகள் உபயோகமாக இருக்கும். ஏனென்றால், இரவு நேரத்தில் ஏற்படும் சிரமங்களை களைவதற்காகவே பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே சில பிரத்யேகமாக விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளது. அதன்படி யாரேனும் கடைபிடிக்கவில்லை என்றால் ரயில்வே துறையிடம் பயணிகள் புகார் அளித்து நிவாரணம் பெறலாம்.
ரயில் விதிமுறைகள்
1. இரவு 10 மணிக்கு மேல் விளக்குகளை அனைத்துக் கொள்ளலாம்.
2. பயணி ஒருவர் முன்பதிவு செய்த தன்னுடைய நடு பெர்த்தை எப்போது வேண்டுமானாலும் திறந்து உபயோகிக்கலாம். சக பயணிகள் அதனை தடுக்கக்கூடாது.
3. இரவு 10 மணிக்கு மேல் டிடிஇ உங்களை தொந்தரவு செய்தால் புகார் அளிக்கலாம்.
4. சக பயணிகள் யாரேனும் பேசி தொந்தரவு கொடுத்தால் புகார் செய்யலாம். யாருடைய தூக்கத்துக்கும் தொந்தரவாக இருக்கக்கூடாது.
5. ஆன்லைன் கேட்டரிங் பயன்படுத்த முடியாது.
மேலும் படிக்க | Provident Fund: மொபைல் நம்பர், SMS மூலம் நிதி இருப்பை சரிபார்த்து கொள்வது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ