Provident Fund: மொபைல் நம்பர், SMS மூலம் நிதி இருப்பை சரிபார்த்து கொள்வது எப்படி?

Provident Fund Account Balance Check: வருங்கால வைப்பு நிதி இருப்பை அதன் சந்தாதாரர்கள் மொபைல் எஸ்எம்எஸ், UMANG ஆப் மூலம் எளிதாக  எப்படி சரிபார்த்துக்கொள்வது என்பது இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 27, 2023, 12:51 AM IST
  • இனி எளிதாக வருங்கால வைப்பு நிதியை சரிபார்த்துக்கொள்ளலாம்.
  • UMANG, SMS மூலம் வைப்பு நிதியை பயனர்கள் பார்த்துக்கொள்ளலாம்.
Provident Fund: மொபைல் நம்பர், SMS மூலம் நிதி இருப்பை சரிபார்த்து கொள்வது எப்படி? title=

Provident Fund Account Balance Check: வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்கள் அல்லது EPF சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள பண இருப்பை சரிபார்க்க எங்கும் செல்ல வேண்டியதில்லை. EPF சந்தாதாரர்கள், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, EPFO ஆன்லைன் சேவைகள் மூலம் தங்கள் வைப்பு நிதி இருப்பை வீட்டிலேயே எளிதாகச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

ஆப் மூலம் EPF விவரங்களைச் சரிபார்க்க, EPF உறுப்பினர்கள், தங்கள் UAN ஐடியை ஆக்டிவேட் செய்து, உங்கள் போன் நம்பரை இணைத்துகொள்ள வேண்டும். இதன்மூலம், அவர்கள் பணிபுரியும் பல்வேறு நிறுவனங்களில் தங்கள் EPF-க்காக செய்யப்பட்ட டெபாசிட்களின் விவரங்களை UAN இல் பெறலாம். இது EPF திட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தனித்துவமானது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) UAN எண் ஒதுக்கப்படுகிறது. மேலும் அவர்கள் எந்த நிறுவனத்தை மாற்றினாலும், ஊழியர்கள் தங்கள் பணியின் போது ஒரு UAN-ஐ மட்டுமே வைத்திருக்க வேண்டும். PF இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க | 'வேலை போயிருமோ'...பயத்தில் தூங்காமல் தவிக்கும் இந்தியர்கள் - பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

தொலைபேசி எண் மூலம் PF கணக்கு இருப்பை சரிபார்க்க:

EPF சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படுகிறதா இல்லையா என்பதை சரிபார்க்க,  பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்தால் போதும். இந்த அழைப்பு ஒரு ரிங் ஆனதும் தானாகவே துண்டிக்கப்படும். இது மூலமாகவும் உங்கள் கணக்கின் நிதி இருப்பை அறிந்துகொள்ளலாம். 

எஸ்எம்எஸ் மூலம் PF நிதி இருப்பை சரிபார்க்க:

  • உங்கள் மொபைல் எண்ணில் இருந்து EPFOHO UAN ENG என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.
  • smsஇல் உள்ள கடைசி 3 எழுத்துக்கள் உங்களுக்கு விருப்பமான மொழியைக் குறிக்கின்றன. இதில் ENG என்றால் ஆங்கிலம். ஆங்கிலம், இந்தி, தமிழ், மராத்தி, பெங்காலி, கன்னடம், பஞ்சாபி, தெலுங்கு, மலையாளம் மற்றும் குஜராத்தி என மொத்தம் 10 மொழிகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.
  • இந்திக்கு, பஞ்சாபிக்கு HIN, PUN, குஜராத்திக்கு GUJ, மராத்திக்கு MAR, கன்னடத்திற்கு KAN, தெலுங்கிற்கு TEL, தமிழுக்கு TAM, மலையாளத்திற்கு MAL, பெங்காலிக்கு BEN என அனுப்ப வேண்டும்.
  • UAN நம்பர் உடன் பதிவு செய்யப்பட்ட அதே மொபைல் எண்ணில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
  • உங்கள் இறுதி PF பங்களிப்பு, நிதி இருப்பு விவரங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய KYC தகவலை உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS மூலம் அனுப்பும்.

UMANG பயன்பாட்டைப் பயன்படுத்தி நிதி இருப்பை சரிபார்க்க:

  • Play Store/App Store இல் இருந்து UMANG செயலியை தரவிறக்கவும்.
  • உங்கள் ஸ்மார்ட்போனில் UMANG செயலியைத் திறந்து உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.
  • கீழே உள்ள 'All Service' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • விருப்பங்களின் பட்டியலில் இருந்து 'EPFO'-ஐ தேடித் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் EPF இருப்பைச் சரிபார்க்க, 'View Passbook' என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் UAN-ஐ கொடுத்து, 'Get OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.
  • OTP-ஐ உள்ளீடு செய்து, 'Login' என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் மொபைல் திரையில் அடுத்து தோன்றும் படிகளைப் பின்பற்றவும்.
  • அதன் பிறகு, உங்கள் EPF இருப்புடன் உங்கள் பாஸ்புக் திரையில் காட்டப்படும்.

மேலும் படிக்க | மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்...? - பாஜக அடிக்கும் திடீர் பல்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News