ஜோதிட சாஸ்திரப்படி, புதன் கிரகம் 2022 ஏப்ரல் 25-ம் தேதி தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறது. ஒருவருக்கு பகுத்தறிவு, கல்வி, எழுத்து, பேச்சாற்றல், புத்திசாலித்தனத்தைத் தரக்கூடியதும், சிறப்பான சிந்தனையால் தன் தொழில், வணிகத்தில் வெற்றியை பெற உறுதுணையாக இருக்கும் கிரகம் புதன் பகவான். புதனின் இந்த ராசி மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான நாளாக அமையும். நீண்ட நாட்களாக நிதி விஷயத்திலும், தொழில் விஷயத்திலும் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு சற்றி தீர்வு கிடைக்கக்கூடும். தற்போது ஏப்ரல் 25ம் தேதி வரை மேஷ ராசியில் சஞ்சரிக்க உள்ள புதன் குறிப்பிட்ட ராசியினருக்கு சில அற்புத பலன் தர உள்ளார்.  எனவே புதனின் ராசி மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதனின் ராசி மாற்றம் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.


மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பு அமையும். எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். வழக்கறிஞர்கள், ஊடகங்கள், மார்க்கெட்டிங், கல்வி ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சிறந்ததாக இருக்கும். எதிரிகள் மீது வெற்றி உண்டாகும். 


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: 30 நாட்களுக்கு இக்கட்டான நிலை 


ரிஷபம்: வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய வீட்டைக் கட்ட விரும்பினால் அல்லது வீட்டைப் புதுப்பிக்க விரும்பினால், இந்த நேரம் சிறந்தது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கூட்டாளியின் ஆதரவு கிடைக்கும்.


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி நன்மை தரும். ஆசைகள் நிறைவேறும். பதவி உயர்வு - சம்பளம் உயர்வு கூடும். முதலீடு செய்வதற்கும் இது ஒரு நல்ல நேரம். குறிப்பாக தொழிலதிபர்கள் அதிக லாபம் அடைவார்கள். அவர்கள் புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், இந்த நேரம் சிறந்தது. 


சிம்மம்: புதனின் மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலை-வியாபாரத்தில் பொன்னான வாய்ப்புகளைத் தேடித் தரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு- சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளின் வியாபாரம் ஏற்றத்துடன் காணப்படும். பெரிய ஆர்டர்களைக் பெறலாம். சிக்கிய பணத்தை மீட்டெடுக்க முடியும். ஒட்டுமொத்தமாக இது ஒரு அற்புதமான நேரம்.


கன்னி: கன்னி ராசிக்காரர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் வருமானமும் அதிகரிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அன்பையும் மரியாதையையும் பரிமாறிக் கொள்வீர்கள். வாழ்க்கை மகிழ்ச்சியுடன் நிறைந்திருக்கும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.


தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரம் இரண்டிலும் லாபம் கிடைக்கும். வெற்றியும் வரும், வருமானமும் அதிகரிக்கும். பெரிய பதவி கிடைக்கலாம். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். ஒரு புதிய வேலையைத் தொடங்குவதற்கு சிறந்த நேரம் இது, ஆனால் முழுமையான ஆய்வு மற்றும் தயாரிப்புக்குப் பிறகு மட்டுமே தொடங்கவும்.


மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR