புது டெல்லி: EPFO Pension Scheme: விரைவில் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ஒன்பது மடங்கு வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9,000 ஆக உயர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (Employees Pension Scheme) சந்தாதாரர்களுக்கு அரசு இந்தப் பரிசை வழங்கப் போகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிப்ரவரியில் முடிவு எடுக்கப்படும்
இது குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கூட்டத்தில் பிப்ரவரி மாதத்தில், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் (Minimum Monthly Pension) பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகின்றது. ஏற்கனவே இது குறித்து பல்வேறு கோரிக்கைகள் இருந்து வரும் நிலையில், இது குறித்தான முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ALSO READ | அசத்தல் திட்டம்! அஞ்சலகத்தில் 500 ரூபாய் செலுத்தினால் 1.5 லட்சம் பெறலாம்!


குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என ஓய்வூதியர்கள் (Pensioners) நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து பலமுறை விவாதம் நடந்துள்ளது. இது மட்டுமின்றி நாடாளுமன்ற நிலைக்குழுவும் இது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கியிருந்தது. குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.


இந்த நிலையில் விரைவில் குறைந்தபட்ச ஊதியம் 1,000 ரூபாயிலிருந்து, 9,000 ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மார்ச் 2021 இல் இது தொடர்பான பரிந்துரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன
இது தொடர்பாக, 2021 மார்ச்சில், பார்லிமென்டின் நிலைக்குழு ஆலோசனைகளை வழங்கியது. இதன்போது, ​​குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை தற்போதுள்ள ஆயிரத்தில் இருந்து மூவாயிரமாக உயர்த்த வேண்டும் என அக்குழு தெரிவித்திருந்தது. கொரோனா காரணமாக இது குறித்த இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை, எனினும் வரவிருக்கும் இபிஎஸ் இன் 95 என்-அசிடைல் சிஸ்டைன் (N-acetyl cysteine) குழுவில் முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாளியாகியுள்ளது.


அரசின் புதிய தொழிலாளர் மசோத்தாக்கள் அமலுக்கு வந்தால், டேக் ஹோம் சேலரி குறையும். அதே சமயம் ஓய்வூதியம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ | ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: அதிகரிக்கிறது ஓய்வூதியம், முழு விவரம் இதோ!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR