Employee Pension Scheme: நீங்கள் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) பயனாளியாக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. EPS வரி விதிப்பை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தற்போது உச்ச நீதிமன்றமும் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் (EPF) உறுப்பினர்கள் EPS இன் உறுப்பினர்களாகவும் ஆகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. EPF கணக்கு வைத்திருப்பவரின் சம்பளத்தில் 12% PFக்கு செல்கிறது. அதே தொகை முதலாளியின் கணக்கிலிருந்தும் செல்கிறது. அதில் ஒரு பகுதி EPS இல் டெபாசிட் செய்யப்படுகிறது.
EPS இல் அடிப்படை சம்பளத்தின் பங்களிப்பு 8.33% ஆகும். ஆனால் ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளத்தின் வரம்பு ரூ.15,000 ஆகும். ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய நிதியில் அதிகபட்சமாக ரூ.1250 மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.
இப்போது உள்ள விதி என்ன?
விதிகளின்படி, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.15,000 அல்லது அதற்கு மேல் இருந்தால், ஓய்வூதிய நிதியில் ரூ.1250 டெபாசிட் செய்யப்படும். அடிப்படை சம்பளம் 10 ஆயிரம் ரூபாய் என்றால் பங்களிப்பு தொகை 833 ரூபாய் மட்டுமே இருக்கும். பணியாளரின் ஓய்வூதியத்தின் (Pension) மீதான ஓய்வூதிய கணக்கீடு அதிகபட்ச சம்பளமாக 15 ஆயிரம் ரூபாயாக மட்டுமே கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஓய்வு பெற்ற பிறகு, இபிஎஸ் விதியின் கீழ், ஊழியர்கள் 7,500 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக பெற முடியும்.
15,000 என்ற வரம்பு நீக்கப்பட்டால், 7,500 ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் கிடைக்கும்.
EPFO இன் ஓய்வு பெற்றோரின் அமலாக்க அலுவலகத்தின் பானு பிரதாப் ஷர்மாவின் கூற்றுப்படி, ஓய்வூதியத்தில் இருந்து 15,000 ரூபாய் என்ற வரம்பு நீக்கப்பட்டால், 7,500 ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறலாம். ஆனால், இதற்கு இபிஎஸ்-க்கு முதலாளியின் பங்களிப்பையும் அதிகரிக்க வேண்டும்.
இதன் கணக்கீடு என்ன?
இபிஎஸ் கணக்கீட்டிற்கான சூத்திரம் = மாதாந்திர ஓய்வூதியம் = (ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் x இபிஎஸ் கணக்கில் பங்களிப்பின் ஆண்டுகள்) /70.
ALSO READ | pensioners: ஆயுள் சான்றிதழை சமர்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு
ஒருவரின் மாதச் சம்பளம் (கடந்த 5 ஆண்டுகளின் சராசரி சம்பளம்) ரூ.15,000 ஆகவும், பணியின் காலம் 30 ஆண்டுகளாகவும் இருந்தால், அவருக்கு மாதம் ரூ.6,828 மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கும்.
வரம்பு நீக்கப்பட்டால் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?
15 ஆயிரம் என்ற வரம்பு நீக்கப்பட்டு, ஊழியரின் சம்பளம் 30 ஆயிரமாக இருந்தால் (30,000 X30)/70 = ரூ 12,857 படி ஓய்வூதியம் கிடைக்கும்.
ஓய்வூதிய விதிகள் இவைதான்
நீங்கள் EPF தொகையை எடுக்க விரும்பினால், உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம். ஆனால், ஓய்வூதியத் தொகையை (Employee pension Scheme) எடுப்பதில் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். ஏனெனில், இதில பல விதிகள் உள்ளன. இவற்றை பணியாளர்கள் (Employees) தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். வெவ்வேறு சூழ்நிலைகளில் ஓய்வூதியத் தொகையை என்ன செய்ய முடியும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
EPSக்கான தற்போதைய விதிகள்
- EPF உறுப்பினராக இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 10 வருடங்கள் வழக்கமான பணியில் இருந்திருக்க வேண்டும்.
- 58 வயதை எட்டினால் ஓய்வூதியம் கிடைக்கும்.
- 50 ஆண்டுகளுக்குப் பிறகும், 58 வயதுக்கு முன்பும் ஓய்வூதியம் பெறும் வசதியும் உள்ளது.
- முதல் ஓய்வூதியம் பெறும்போது, குறைக்கப்பட்ட ஓய்வூதியம் கிடைக்கும்.
- இதற்கு படிவம் 10டி-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
- ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
- பணியாளரின் சேவை காலம் 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், அவருக்கு 58 வயதில் ஓய்வூதியத் தொகையை எடுப்பதற்கான வசதி கிடைக்கும்.
ALSO READ | அரசு ஊழியர்களுக்கு 300 நாட்கள் Earned Leave!புதிய விதி எப்போது அமலுக்கு வரும்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR