புதிய கார் வாங்குகிறீர்களா; வாகன காப்பீட்டு சுமையை குறைக்க சில டிப்ஸ்..!!
புதிய கார் வாங்க திட்டமிடும் போது, கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால், இன்சூரன்ஸ் பிரீமியத்தின் சுமையை குறைக்கலாம். பிரீமியம் சுமையை நீங்கள் குறைக்கும் மூன்று வழிகளை அறிந்து கொள்ளலாம்.
புது தில்லி: பண்டிகைக் காலங்களில் வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த முறை பண்டிகை காலத்தில் வாகன விற்பனை கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன முன்பதிவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில், புதிய கார் வாங்க திட்டமிடும் போது, கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால், இன்சூரன்ஸ் பிரீமியத்தின் சுமையை குறைக்கலாம். பிரீமியம் சுமையை நீங்கள் குறைக்கும் மூன்று வழிகளை அறிந்து கொள்ளலாம்.
ஆன்லைனில் காப்பீடு
புதிய கார் வாங்கினால், டீலரிடம் இருந்துதான் இன்ஷூரன்ஸ் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை என்று காப்பீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் வெளியில் இருந்து காப்பீடு வாங்கலாம். வாகனத்தை முன்பதிவு செய்யும் போது, வாங்குபவர் இன்சூரன்ஸ் குறித்து ஆன்லைனில் விபரங்களை தேடினால், உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். காப்பீட்டு பிரீமியங்களை ஒப்பீடு செய்தூ உதவும் பல இணையதளங்கள் உள்ளன. அங்கு, உங்கள் காரின் மாதிரியை குறிப்பிட்ட காப்பீட்டு பிரீமியத்தை ஒப்பிடலாம். டீலருடன் ஒப்பிடும்போது ஆன்லைனில் பிரீமியத்தில் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை எளிதாக சேமிக்கலாம். உதாரணமாக, மாருதி பிரெஸ்ஸாவின் காப்பீட்டிற்கு டீலர் ரூ.40,000 பிரீமியமாக வசூலிக்கிறார். அதே சமயம் ஆன்லைனில் தேடும் போது ரூ.30,000 பிரீமியத்தில் இன்சூரன்ஸ் பெற வாய்ப்புள்ளது.
ALSO READ | நவம்பர் 1ம் தேதி முதல் பல முக்கிய மாற்றங்கள்; முழு விபரம் உள்ளே..!!
தேவைகேற்ற பாலிஸியை தேர்ந்தெடுக்கவும்
காப்பீட்டு பிரீமியத்தின் சுமையை நீங்கள் குறைவாக வைத்திருக்க விரும்பினால், உங்கள் தேவைக்கேற்ப பாலிசியைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு நீங்கள் பாலிசியை கஸ்டமைஸ் செய்ய வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சில பேக்கேஜ்களை வழங்குகின்றன, அதாவது சாவியை இழந்ததற்கான க்ளெய்ம், இன்ஜினுக்கான பாதுகாப்பு, தனிப்பட்ட உடமைகளை இழப்பதற்கான பாதுகாப்பு, பயணத்தின் போது கார் சேதமடைவதற்கான பாதுகாப்பு போன்ற பல அம்சங்களை சேர்க்கின்றனர். இருப்பினும், இந்த அம்சங்கள் காப்பீட்டு பாலிசியில் சேர்க்கப்படும்போது பிரீமியம் சுமை அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்களுக்குத் தேவையான வசதிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றை மறுக்கவும். இதன் மூலம் பிரீமியம் சுமையை குறைக்கலாம்.
ALSO READ | eSign Aadhaar: ஆதார் மூலம் டிஜிட்டல் கையொப்பம் செய்வது எப்படி..!!
டீலரிடம் தள்ளுபடி தருமாறு கோரவும்
நீங்கள் ஆன்லைனில் காப்பீடு வாங்க விரும்பவில்லை என்றால், நீங்கள் காரை வாங்கும் டீலரிடம் தள்ளுபடி கேட்கவும். நிச்சயமாக டீலர் உங்களுக்கு தள்ளுபடி தருவார். டீலர்களுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கும் இடையே டை-அப் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் காப்பீட்டு நிறுவனம் டீலருக்கு தனி கமிஷன் கொடுக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அழுத்தம் கொடுத்தால், வியாபாரி தங்களது கமிஷன் மார்ஜினைக் குறைத்து உங்களுக்கு தள்ளுபடியை வழங்குவார்.
ALSO READ | செல்ல மகளுக்காக தினம் ₹416 சேமித்தால் போதும்; ₹65 லட்சம் பெறலாம்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR